Skip to main content

சமூக - புலன் விசாரணை

மசூதியில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதி: இந்து அமைப்பு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது கேரள உயர் நீதிமன்றம்

https://tamil.thehindu.com/india/article25193870.ece

முடியிருக்கிற வீட்டு கதவை தட்டலாம் திறந்திருந்தா கூட பரவாயில்ல ஆனால் சுத்தி சுத்தி ஓப்பனாக விரிச்சோடி கிடக்கும் காலி கிரவுண்டுல போய் ஏண்டா தட்றிங்க..

எந்த பள்ளிவாசலிலும் முஸ்லிம் பெண்கள் வருவதற்கோ தொழுவதற்கோ தடை ஏதுமில்லை..

ஆனால் அந்நிய ஆணும் பெண்ணும் சேர்த்து தொழ அனுமதி இல்லை..

தமிழகம் உட்பட உலகில் பல இடங்களில் பெண்களுக்கு தனியாக இடமும் ஆண்களுக்கு தனியாக இடமும் இருக்கத்தான் செய்கிறது..

புனித மக்காவிலும் மதீனாவிலும்  தொழும் காட்சியை பார்க்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இந்த உண்மையை  அறிய முடியும் எனும்போது இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் இஸ்லாமிய அறிவோ உலக அறிவோ அறவே இல்லாதவராகத்தான் இருக்க முடியும்..

மீண்டும் சொல்கிறோம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பள்ளிவாசல்களில் பெண்களும் தொழுவதற்க்கு முழு சுதந்திரமான அனுமதியுன்டு.

 அதிலும் தமிழ் நாட்டில் உள்ள பள்ளிவாசல்களை விட கேரளாவில் உள்ள பள்ளிவாசல்களில் பெண்கள் தொழுவதற்க்கு வசதிகள் அதிக கட்டமைப்புள்ளது.

 இந்த அமைப்பினர் தேவை இல்லாமல் சபரிமலை விசயத்தை பற்றியும் சில விச துளிகளை கக்கியுள்ளார்..

இதனால் இந்து சமுதாய மக்களின் வெறுப்பையும் முஸ்லீம்களுக்கு எதிராக தூன்டும் விதமாகவும் இருக்கிறது.

மக்கள் இவர்களின் பின்புலத்தையும் ஆராயவேண்டும்.

*குறிப்பு :-* பெண்கள் மசூதியில் தொழுவதற்க்கு எந்த தடையும் இல்லை.... அதே போல் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று அவர்களின் மத சட்டம் இருந்தால் அதை திருத்தம் செய்ய எந்த தனி மனிதனுக்கும் உரிமை இல்லை.

முஸ்லீம் பெண்கள் பள்ளிவாசலில் தொழ அனுமதி உள்ளது அதற்கான ஆதாரம்

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்’

என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 900, 873, 5238.

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 865, 899.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

நூல்: புகாரி 578, 372, 867, 872

.’நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 707, 862, 708, 709, 710, 868.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று ‘பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர்’ என்று தெரிவித்தார்கள்.

நூல்: புகாரி 866, 569, 862, 864.

தொழுகை முடிந்தவுடன் பெண்கள் முதலில் வெளியே செல்லும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மற்ற ஆண்களும் தமது இடத்திலேயே அமர்ந்திருப்பது வழக்கம்.

நூல்: புகாரி 875, 837, 866

- சமூக - புலன் விசாரணைsamugapulanvisaranai

Comments