Skip to main content

Posts

அநீதிக்கு எதிரான குரல் ✒

வெளிநாட்டில் வாழ் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்

இந்திய வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களால் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்வதற்கும் அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தி தங்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.. · முதலில் https://www.nvsp.in (National Voters Service Portal) எனும் வெப் சைட்டினுள் நுழையவும். · பிறகு ‘Apply online for registration of Overseas voter’ எனும் பட்டனை தேர்வு  செய்தால் ‘Form 6A’  வெளிப்படும். · உங்களுக்கு தேவையான மொழியை (ஹிந்தி/ஆங்கிலம்/மலையாளம்) தேர்வு செய்யவும். ·பிறகு கேட்கப்பட்டுள்ள விபரங்களை தெளிவாக பதிவு செய்யவும். விண்ணப்பத்தை நிரப்புவதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்து பலன் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம் https://youtu.be/6Yo9go4bsBI
Recent posts

பெயரை மாற்றினால் வரலாறு மாறிவிடுமா / அல்லது மறைந்துதான் விடுமா??

இந்தியாவில் உள்ள பல இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்களின் பெயர் மாற்றம் - பாஜக சதி திட்டம் http://news7tamilvideos.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2.html இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்களின் பெயரை மாற்றினாலும் இந்த தேசத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் அர்பணிப்பையும் யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.. வரலாற்றில் இஸ்லாமிய பெயரை பார்த்து தொடை நடுங்கிய காவிகூடாரம் என எழுதப்படும்.... ஆங்கிலேயேன் முதல் காவி கபோதிகள்வரையிலும் இஸ்லாமிய பெயரை கண்டாலே அஞ்சி நடுங்கியவர்கள் என நாளைய தலைமுறை பேசும்.. மாற்றுங்கள் அனைத்து பெயர்களையும் மாற்றுங்கள் அதோடு சேர்த்து அமித்ஷா பெயரையும் மாற்றுங்கள் அமித்ஷா பெயர் பாரசீக பெயராம் அதை மாற்ற முயற்சி செய்யுமா பாஜக?? இந்தியாவை இஸ்லாமியர்கள் லோடி கில்ஜி முகலாய பேரரசுகள் 850 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்திருக்கிறது ஆனால் நேற்றைய பாசிச அரசு. பெயரை மாற்றினால் வரலாற்றை மாற்றிவிடலா

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள் நிறுத்த

ராஜலட்சுமியை தொடர்ந்து இப்போது சொளமியா

தருமபுரி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார் https://tamil.thehindu.com/tamilnadu/article25463412.ece இனி எத்தனை காலம் தான் இந்த அவலம் தொடரும்???  நீதிமன்றங்கள் தண்டனையை கடுமை ஆக்கினால் மட்டுமே இந்த கேடுகெட்ட குற்றங்கள் குறையும்.. சவுமியா உயிர் பறித்தது கயவர்களா? உயிரற்ற அரசு எந்திரமா? தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி, பழங்குடி சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை. மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 6ம் தேதி, அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்,சதீஷ்  என்ற இரண்டு அயோக்கியர்கள் சவுமியாவை பாலியல் கொடுமை செய்துள்ளனர். தன்னைக் காத்துக் கொள்ள சவுமியா நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த அயோக்கியர்கள் சவுமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். மாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். காவலர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து,மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் புகாரை பெற மறுத்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் கவணத்திற்கு எடுத்து

நவம்பர் - 11, தேசிய கல்வி தினம்

தேசிய கல்வி தினம்!   நவம்பர் 11, (சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்.) இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாள்தான் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. 1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி... அரேபியர்களான மௌலானா முஹம்மத் க்ஹைருத்தீனுக்கும் ஆலியாவுக்கும் மகனாக... சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத் எனப்பட்ட குலாம் முஹினுத்தின். அரபுத்தாய்க்கு பிறந்தவர் தன் ஆரம்ப கல்வியறிவை தாய்மொழி அரபியில் கற்றவர் பிறகு பல மொழிகளையும் கற்று, உயர் கல்வியறிவை எகிப்தின் கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்திலும் கற்றார். சே குவாரா அர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவின் விடுதலைக்கு போராடியதுபோல... குலாம் முஹினுத்தின் இந்தியா வந்து பிரிட்டிஷ்க்கு எதிராக விடுதலைக்கு போராடியவர். இங்கு வந்து ஹிந்தி உருது ஆகிய மொழிகளை கற்று அவற்றில் புலமை பெற்றார். விடுதலை வேட்கைக்காக நிறைய எழுதினார்.  பலமுறை பல வருஷங்கள் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்து சிறை சென்ற தியாகி. மவுலானா

புதிதாக தொழில் தொடங்குவதை பற்றிய தகவல்

தொழில் தொடங்க உரிமம் பெறுவது எப்படி? முழு விவரம்.? அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும். ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது சட்டம். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம்.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும்.  தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது. அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும். யாருக்கு தொழில் உரிமம் தேவை? ஒரு தொழிலை தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கியிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குபவர்களுக்கு இந்த அனுமதி வேண்டும். குறிப்பாக தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்க

வரலாற்றை மறைக்க முடியும் ஆனால் ஒருபோதும் அழிக்க முடியாது.

இந்துத்துவா அமைப்புகள், காவி கும்பல்கள் திப்பு சுல்தான் என்பவர் ஏதோ இந்துக்களின் விரோதி போல ஒரு பிம்பம் உருவாக்கி மக்கள் மத்தியில் போலியாக நச்சு கருத்தை பரப்புகிறார்கள்..  உண்மையில் திப்பு சுல்தான் என்பவர் யார்.?   மக்களுக்கு என்ன செய்தார்.? இந்துக்களையும் முஸ்லிம்களையும் இன்னும் பிற மக்களையும் எப்படி தனது ஆட்சி காலத்தில் நடத்தினார்.? என்பதை கீழே பார்ப்போம்.. https://youtu.be/ofoPyXno168 1767ஆம் ஆண்டில் தனது 17வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வாணியம்பாடியில் முதல் வெற்றியை பதிவு செய்தார்  திப்பு சுல்தான்.. பின்பு இவர் போர் செய்த அனைத்திலும் பெரும்பாலும் வெற்றியே பெற்றார் திப்பு சுல்தான்.. ஆங்கிலேயர் இவரின் வலிமையை கண்டு வியந்து போனார்கள்.. "யுத்தங்களை போர்களத்திலேயே முடித்து கொள்ளுங்கள். ஒருபோதும் அப்பாவி மக்களின் மீது வன்முறை நடத்த கூடாது. பெண்களை கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தைகள், முதியோர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்" என்று எழுத்து முலம் ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.. NASA விண்வெளி நுழைவ