Skip to main content

Posts

Showing posts from October, 2018

சுதந்திர இந்தியாவில் ஒரு போலீஸ் படை நடத்திய மிக மோசமான கூட்டுப் படுகொலை

மீரட்டில் முஸ்லிம்கள் 42பேர் கொல்லப்பட்ட வழக்கில் 31 ஆண்டுகள் கழித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு 1986 ஆம் ஆண்டு பாபர் மசூதி சீல் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் சமூகங்களிடையே பதட்டம் ஆரம்பித்தது. இந்நிலை இரு சமூகத்தின் தலைவர்களுடைய உணர்ச்சி தூண்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டு 1987 மார்ச்சில் கலவரமாக வெடித்தது. ஜூன் மாதம் வரை தொடர்ந்த இக்கலவரத்தில் 390 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுவரை ஒருவர்கூட இக்கலவரக் குற்றத்தில் தண்டிக்கப்படவில்லை. இக்கலவரத்தின்போது, மீரட் நகரிலுள்ள ஹாஷிம்புரா கிராமத்திலிருந்து குழந்தைகள், முதியவர்களை நீக்கிவிட்டு 65 முஸ்லிம் இளைஞர்களை உ.பி. சிறப்பு இராணுவப்படையினைச் சேர்ந்த சிப்பாய்கள் லாரிகளில் ஏற்றிச் சென்று சுட்டுக்கொன்று, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கால்வாயில் வீசி சென்றனர். 1988 முதல் 2015 வரை நடந்த பல்வேறு விசாரணை மற்றும் இழுத்தடிப்புக்கு பிறகு குற்றம் சாட்டபட்டவர்கள் அணைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்தனர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக

காவல்துறை தலையிட கூடாத வழக்குகள் என்ன??

1.நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள் 2. பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட வழக்குகள் 3.ஒப்பந்த வழக்குகள் 4. விளம்புகை பரிகார வழக்குகள் 5. ஏற்றது ஆற்றுக வழக்குகள் 6பாகப் பிரிவினை வழக்குகள் 7. இழப்பீடு ( நஷ்ட ஈடு) கோருதல் வழக்குகள் 8. அவதூறு வழக்குகள் 9. வாரிசுரிமை வழக்குகள் 10. விவாகரத்து வழக்குகள் 11. அடைமான வழக்குகள் 12. அடைமானச் சொத்து மீட்பு வழக்குகள் 13. செயலுறுத்துக் கட்டளை வழக்குகள் 14. உறுத்துக் கட்டளை வழக்குகள் 15. கணவன்,மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வழக்குகள் 16. சீவனாம்ச வழக்குகள் 17. திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கும் வழக்குகள் 18. நொடிப்புநிலை வழக்குகள் 19. காப்பாளர் நியமன வழக்குகள் 20. குழந்தைகளை மீட்பதற்கான வழக்குகள் 21. சொத்து மீட்பு வழக்குகள் ஆகியவை உரிமை வழக்குகளாகும். இவ்வுரிமை வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது.

மோடி அவர்களே? இந்த வரலாற்றையும் கல்வெட்டில் பதிவிடுங்கள்..

3000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட பட்டேல் சிலை கல்வெட்டில் அவர் சொன்ன உண்மையை எழுத முடியுமா மோடி அவர்களே?? ஆர்எஸ்எஸ் - ன் பயங்கரவாதத்தை தோலுரிக்கிறார் பட்டேல் ; "The activities of the RSS constituted a clear threat to the existence of the government and the state" "All their speeches were full of communal poison.... As a final of that poison, the country had to suffer The sacrifice of Gandhi.. RSS men expressed joy and distribution sweet's after Gandhiji's death. It became inevitable for the government to take action against the RSS"  - sardar vallabhai patel - 1948 ஆர்எஸ்எஸ் - ன் அனைத்து பேச்சுகளும் மத விஷ கருத்துக்கள்.  தேசத்தந்தை காந்தியை படுகொலை செய்துவிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடியவர்கள் ஆர்எஸ்எஸ் என்று குறிப்பிட்டுள்ளார் பட்டேல். ஆர்எஸ்எஸ் - ன் நச்சுக்கருத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்கிறார் பட்டேல்.. https://sabrangindia.in/article/open-letter-sardar-patel-medha-patkar காங்கிரஸ் கட்சி தலைவர் பட்டேலு

அடித்தட்டு மக்கள் உண்ண உணவில்லாத நாட்டில் எதற்கு 3000 கோடியில் யாருக்கும் பயனில்லாத சிலை??

உலகிலேயே மிக நீலமான பாலத்தை சீனா இன்று திறக்க உள்ளது, அதே நேரம் உலகிலேயே மிக உயரமான பட்டேல் சிலையை இந்தியா (மோடி) அரசு  திறக்க உள்ளது, இதுதான் இந்தியாவை ஆளும் முட்டாள்களின் வளர்ச்சி.. சிலை திறப்பால் ஏழைகளின் வாழ்கை முன்னேறுமா  எரிபொருள் விலை குறையுமா அல்லது விலைவாசி குறைந்ததா(?) சிலை அரசியலும் முட்டாள் மக்களும். அரசியல் கட்சிகள் சிலை வைப்பதே ஓட்டிற்காக தான் என்பதை மக்கள் உணர்ந்து விட்டால். 3000 கோடி செலவில் பட்டேல் சிலை வைக்க பட்டிருக்காது. வள்ளுவருக்கோ,கண்ணகிக்கோ, காந்திக்கோ,பட்டேலுக்கோ சிலை வைப்பதினால். ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வந்து விட போகிறதா ? பெட்ரோல் விலை குறைய போகிறதா ? சடலத்தை ஆம்பலன்சில் தூக்கி செல்ல முடியாமல் கையில் தூக்கி செல்லும் இந்த நாட்டில் தான் 3000 கோடிக்கு சிலை. இதை நியாய படுத்துபவர்கள் அது அவர்களுக்கு செய்யும் மரியாதை, மற்றும் அவருடைய வரலாரை மக்கள் நினைவு கூறுவதற்கு என்பார்கள். மரியாதை என்பது சிலைகளில் இல்லை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இருக்கிறது. அவர்களை போல வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது... 5 ரூபாய்க்கு வழி இல்லாமல் தவிக்கும் அ

குற்ற வழக்கில் கைப்பற்றிய வாகனம்...

குற்ற வழக்கில் கைப்பற்றப்படும் வாகனங்களை நீதிமன்றத்திலோ அல்லது காவல்நிலையத்திலோ ஆண்டுக் கணக்கில் வைத்திருக்க தேவையில்லை. அவ்வாறு செய்வதால் வாகன உரிமையாளருக்கு மிகுந்த இழப்பு ஏற்படும்  எனவே குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை புகைப்படம், வீடியோ எடுத்து அவற்றை நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும்  இந்த நடைமுறையை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்க வேண்டும். வாகன உரிமையாளர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRL. OP - 5278 /2007 & 9744/2010, Manager, Sundaram Finance Company Vs Inspector of police, Kaveripattinam P. S. Krishnagiri and Mani (2010-2-LW-CRL-1122)

உணவு பாதுகாப்பு துறை ஏன் ஒருதலையாக செயல்படுகிறது??

தமிழ்நாட்டு உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்களுக்கு டாஸ்மாக் பார்களில் நடக்காத ரெய்டு... சத்துனவு கூடம் மற்றும் ரேசன் கடைகளில் நடக்காத ரெய்டு... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்ல்படும் அரசு கேன்டீன்களில் நடக்காத ரெய்டு... பெரிய நிறுவனங்களான ஆவின் பாலகம் மற்றும் ரயில்வே அரசு உணவகங்கள் கேட்டரிங்கில் நடக்காத ரெய்டு... அம்மா உணவகத்திலும் அரசு விடுதிகளில் உள்ள உணவகத்தில் நடக்காத ரெய்டு... மடங்களிலும் நித்திய உணவு திட்டத்தில் நடக்காத ரெய்டு... அரசு ஆஸ்பத்திரியில் செயல்படும் உணவகங்கள் மற்றும் மருந்து கடைகளில் நடக்காத ரெய்டு... கட்சிக்கரர்கள் போடும் அன்னதானத்தில் நடக்காத ரெய்டு... ஏன் தீபாவளிக்கு மட்டும் தனியார் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர வணிகர்களான இனிப்பகளிலும் பேக்கரி கடைகளிலும் உணவகங்களிலும் மாமூல் இனாம் வாங்க இவ்வளவு ஆர்வமாக செயல்படுகின்றனர்?

நீதிபதிகளாக தேர்ச்சிபெற்ற அனைவருக்கும் எங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்கள்....

அப்ஸல் பாத்திமா B.com BL(Hons) அவர்கள் TNPSC நடத்திய CIVIL JUDGE தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தேர்ச்சி பெற்ற 230 நீதிபதிகளில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.  தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்கள்....  பெண்கள் கல்வியில் இன்னும் அதிகம் முன்னேற வேண்டும். எவ்வளவு முன்னேற்றம் இருந்தாலும் இஸ்லாமிய வாழ்வு முறையை கல்லூரிகளிலும் பணி புரியும் இடங்களிலும் கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ஈருலகிலும் வெற்றி பெற முடியும். முஹம்மது (ஸல்) அவர்கள் கல்வியை அறிவாகப் பெற்று மக்களுக்குப் பயனளிக்கும் நபரைக் குறித்து ஓர் அழகிய உதாரணம் மூலம் விளக்குகின்றார்கள், “நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி வைத்ததற்கு உதாரணம் பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி தண்ணீரை ஏற்றுக் கொண்டு செடி, கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும் அதிலிருந்து

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.

இந்திய தண்டனை சட்டம் ( IPC )

அனைவரும் இந்திய நாட்டின் சட்டங்களை அறிய வேண்டும் என்ற நோக்குடன் இப்பதிவினை அளிக்கின்றோம் முதலில் இந்திய தண்டனை சட்டம் - Indian Penal Code - IPC சட்ட எண் XLV/1860 பற்றி அறிவோம் 23 அத்தியாயம் 511 பிரிவுகளையும்-sections கொண்டது அத்தியாயம்-1 பற்றி அறிவோம் பிரிவு Section -1 இந்திய தண்டனை சட்டம் என்று அழைக்கப்படும் சட்டம் IPC இந்திய முழுவதுக்கும் ஜம்மு-காஷ்மீர் நீங்கலாக பொருந்தும். பிரிவு Section - 2 இந்தியாவுக்குள் குற்றவாளியாகிற ஒவ்வொருவரும் இச்சட்டத்தின் படி தண்டணைக்கு உள்ளாவா். பிரிவு Section -3 இந்தியாவுக்கு வெளியே செய்யப்பட்ட  ஆனால் இந்தியாவுக்குள் சட்டப்படி விசாரணை செய்யப்படும் குற்றங்களுக்கான பிாிவு பிரிவு Section - 4 இந்தியாவுக்கு வெளியிலும்,  அப்பாலும் உள்ள எவ்விடத்திலும் இந்திய குடிமகன் எவரேனுமொருவரால்,   இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் அல்லது வானூர்தி எதிலும் எவரேனும் ஒருவரால் செய்யப்பட்ட குற்றறம் . பிாிவு Section - 5 இந்தச் சட்டத்தினால் பாதிக்கக்கூடாத குறிப்பிட்ட சட்டங்கள் இந்திய அரசின் பணியிலுள்ள அலுவலர்கள்,  தரைப்படை, கப்பற்படை &

ஆப்கன் புத்தர் சிலையும் ( vs ) வல்லபாய் பட்டேல்யும்

ஆப்கன் புத்தர் சிலையும் தலிபான்களும்  இந்தியா வல்லபாய்பட்டேல் சிலையும்  சங்கபரிவார தறுதலைகளும் ஓர் ஒப்பீடு ஆப்கனிஸ்தானில் 2011ஆம் ஆண்டு புத்தர் சிலை ஒன்று தகர்க்கப்பட்டது உலக நாடுகள் தலையிட்டும் முல்லா உமர் கண்டு கொள்ளவில்லை காரணம் அறிவார்ந்த உண்மை ஆப்கன் நாட்டில் உள்ள அந்த புத்தர் சிலையை புணரமைக்க பல மில்லியன் டாலர்களை செலவழிக்க தயாராக இருந்தது இலங்கை சீனா போன்ற நாடுகள் அந்த திட்டத்தை நிறைவேற்ற ஆப்கனில் அன்று ஆட்சி செய்த தலிபான்களை சந்தித்தது தலிபான்களோ  நாங்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கிறோம் எங்களின் மக்களின் முன்னேற்றத்திற்கு அந்த தொகையை தாருங்கள் என்றனர் வந்தவர்கள் நாங்கள் சிலைக்கு செலவு செய்வோம் மனிதர்களுக்கு இல்லை என்றனர் சரி மனிதனுக்கு பயன்படாத பணம் சிலைக்கு தேவையில்லை என்று சிலையை உடைத்து எரிந்தனர் உலக மக்களின் கண்களுக்கு கொடூரமானவர்களாகவும் மத தீவிரவாதியாகவும் தெரிந்த தலிபான்கள் ஆதே நேரம் நமது இந்தியாவில் சங்கபரிவார அடி முட்டாள்களிள் மோடி அரசு ஏழைகளுக்கு வீடு இல்லை மாணவனுக்கு கல்வி இல்லை பிணத்தை தூக்க சில இடங்களில் ஊர்தி இல்லை வட

ஓகுத்தமா ஏகுத்தமா யாரை நாங்கள் குத்தம் சொல்ல??

இந்தியாவில் குளிர்பானத்தை விட ஒரு ஜி.பி. டேட்டா விலை குறைவாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்... https://tamil.news18.com/news/international/modi-japan-speech-64609.html இது ஒரு பெருமையா மோடி ஜி?? உண்ண உணவு இல்லை, இருக்க வீடு இல்லை, வேலை இல்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, விவசாயம் அழித்துக்கொண்டு இருக்கிறது, பணக்காரன் இன்னும் பணக்காரனாக ஆகிறான், ஏழை இன்னும் படும் ஏழையாக ஆகிறான்.... இதற்கெல்லாம் காரணம் யார்??? இதைதெல்லாம் பேச மறுக்கும் நீங்கள் எந்த ஒரு முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லாத டேட்டாவை பெருமையாக பேசுவதை பார்த்து இந்தியர்கள் நாங்கள் என்ன சொல்வது என்பதே தெரியவில்லை.. இனி இப்படியும் நடக்கலாம்.... இந்தியா வல்லரசு ஆகிவிட்ட காரணத்தால்... இனிமேல் சாப்பாட்டுக்கு பதிலாக 2GB டேட்டா.. மருந்துக்கு பதிலாக 3GB டேட்டா.. பெட்ரோல்க்கு பதிலாக 4GB டேட்டா.. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறு/குறு தொழில்களில் வேலை இழந்த 23.5 லட்சம் மக்களுக்கு மாதம் 10GB டேட்டா.. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு மாதம் 20GB டேட்டா.... பிஜேபியின் மத/இன கலவரங்களி

பெண்களே! உங்களுக்கு காவலன் ( kavalan sos ) செயலியை பற்றி தெரியுமா??

பெண்களுக்கான விழிப்புணர்வு பதிவு  " காவலன்" செயலி குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவலன் (Kavalan) என்பது கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிரக்கம் செய்துகொள்ளக்கூடிய செயலி ஆகும். செயலியின் லிங்க் இதோ :- https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kavalansos இந்த செயலியை உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் ஏதேனும் அவசர தேவைக்கு, ஆபத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், உடனடி காவல் உதவியை  பெறமுடியும். உங்கள்  அலைபேசி எண், முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய இரண்டு பேருடைய  எண்களையும் பதிவு செய்ய வேண்டும். இதிலுள்ள சிவப்பு குறியீட்டை அழுத்தினால் சென்னையில் உள்ள பிரதான  கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு செல்லும், உடன் அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். உங்களுடைய இருப்பிடம் ஜிபிஎஸ் மூலமாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிந்துவிடும்.. உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லி குறைந்த நேரத்தில் காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து வந்து உங்களுக

சட்டத்தை பற்றிய ஓர் பார்வை!!

இந்திய அரசியலமைப்பு பகுதிகள் உங்கள் பார்வைக்கு (Indian constitutional articles) parts பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை. பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது. பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள். பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள். பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.(1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது) பகுதி 5 (உட்பிரிவு 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு. பகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு. பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது. பகுதி 8 (உட்பிரிவு 239 -242)

அரசு அதிகாரிகளை தன் பணியை செய்ய விடாமல் தடுக்கிறது இதுதான் பாசிச சித்தாந்தம்

இந்திய அரசாங்கம் "ரிசர்வ் வங்கி"யை சுயமாக இயங்கவிடுவதில்லை.. அதன் முடிவுகளில் தலையிடுகிறது.. இந்த நிலை தொடர்ந்தால் மிக மோசமான பொருளாதார சீரழிவை இந்தியா சந்திக்க நேரிடும்.. - ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்.. http://www.newindianexpress.com/business/2018/oct/27/open-rift-between-rbi-government-as-deputy-governor-warns-of-catastrophe-1890732.html https://tamil.thehindu.com/india/article25345795.ece ரிசர்வ் வங்கி என்பது சுயாட்சி கொண்ட சுதந்திரமான அமைப்பு.  ஆனால், சமீபகாலமாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிப்பது இல்லை. விரைவாகவோ அல்லது கால தாமதமாகவோ சந்தையில் மிகப்பெரிய பொருளாதார பெருந்தீ பற்றிக்கொண்டு சேதத்தை உருவாக்கும், அப்போது, இந்த சுதந்திரமான இந்த ரிசர்வ் வங்கியின் முக்கியத்துவத்தை உணர்வார்கள். "இதை உணர்ந்தே இந்தியாவில் முதலீடு செய்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி விட்டன இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியவர்களும் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட "வெனிசுலாவின் நிலையை விரைவில் சந்திக்க உள்ளது நாடு """ பாஜகவினர

பிஜேபி-யிடம் நாமா ஒரு கேள்வி கேட்டா அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதில் சொல்வார்கள் பாருங்க அது இப்ப இல்ல எப்போதும் புரியாது

மோடியின் தூக்கத்தை கெடுத்த ரபேல்!! இந்த ரபேல் பிரச்சனை மோடியின் தூக்கத்தை கண்டிப்பாக கெடுத்து இருக்கும்..  மிகப்பெரிய கோல்மால் நடந்து இருக்கிறது.. வெளியே சொல்ல முடியாத கோல்மால் நடந்து இருக்கிறது.. அதை சமாளிக்க தெரியாமல் (முடியாமல்) ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து வாய்க்கு வந்தத பேசிட்டு இருக்காங்க.. இதுவரை காங்கிரஸ் கேட்ட எந்த கேள்விக்கும் மோடியிடம் இருந்து பதில் வரவில்லை.. அதற்க்கு பதிலாக ராகுல் ஒரு குழந்தை, ராணுவ ரகசியம், ரபேல் நல்ல விமானம், கன்னி ராசியில் கையெழுத்தானது, டஸ்சால்ட்-ரிலையன்ஸ் மாமன்- மச்சான், மறுபடி ராணுவ ரகசியம், சீனா-பாகிஸ்தான் தலையீடு, தேசபக்தி, ராகுல் ஒரு பப்பு, ராகுல் விவரம் தெரியாமல் பேசுகிறார், அவர் ஒரு குழந்தை, காங்கிரஸ் ஆட்சி 50 ஆண்டு ஊழல்.... இப்படி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்.. வழக்கம் போல சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்கிறார்கள் மோடி & கோ.. எவ்வளவு நாளைக்கு தான் இப்படி பதில் சொல்லிட்டு அலைவாங்கன்னு தெரியல.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. ராகுல் தெளிவாக இருக்கிறார்.. இந்த பிரச்சனையை விடப்போறதில்லை.. கண்டிப்பாக காங்கிரஸ்'சி

ராகுல் காந்தியின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மிக சிறப்பு இது எப்போதும் தொடர வேண்டும்

என்ன ஒரு அருமையான கருத்து நிச்சயம் இந்தியாவை ஆள தகுதி பெற்ற தலைவர் ஆகிவிட்டார் ராகுல் காந்தி. கழுசடைகளை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புவோம் “என் பாட்டி (இந்திரா காந்தி) கொல்லப்பட்டார்.  என் தந்தை (ராஜீவ் காந்தி) கொல்லப்பட்டார்.  இப்போது, நானும் ஒரு நாள் கொல்லப்படலாம்.  ஆனால், அதற்கு நான் அஞ்சவில்லை. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை. முசாபர்நகர் மக்களின் துயரத்தில் என் முகத்தைப் பார்க்கிறேன். என் இதயத்தில் இருந்து சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அப்போது, நான் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தேன். என் ஆசிரியரிடம் ஒருவர் ரகசியமாக ஏதோ சொல்வதைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்து, என்னை உடனடியாக வீட்டுக்குப் போகுமாறு என்னிடம் ஆசிரியர் சொன்னார். வீட்டுக்குச் சென்றபோது, எங்கள் பணியாளர்களின் அலறலைக் கேட்டேன். என் பாட்டிக்கு ஏதோ நிகழ்ந்துவிட்டது என்று யாரோ சொன்னார்கள். வீட்டுக்குச் சென்றபோது, சாலையில் என் பாட்டியின் ரத்தத்தையும், ஓர் அறையில் சவாந்த் சிங் மற்றும் பீந்த் சிங் ஆகிய இரு பாதுகாவலர்களின் ரத்தத்தையும் கண்டேன். அவர்கள் என்னிடம் எப்போதும் நட்புடன் பழகியவர்கள்

உண்மை என்னவென்றே கண்டறியாமல் பக்கத்தை முடக்கும் முகநூல் நிர்வாகம்

ஃபேஸ்புக்... இருண்ட முகம்! ‘‘அடிப்படையான இணைய வசதிகளைப் பற்றித் தெரியாத மக்களுக்கு, இணையம் மூலம் நடக்கும் பல ஆயிரம் டாலர்களுக்கான வர்த்தகம் பற்றியும் தெரியாது. அத்தகைய மக்களுக்கு இணையத்தை அறிமுகப்படுத்துவதில் ஃபேஸ்புக் ஆர்வம் காட்டி வருகிறது. இணையச் சேவையை உலகம் முழுவதும் இலவசமாகக் கொடுப்பது அதிகச் செலவு பிடிக்கும் திட்டம். அதனால் இணையச் சேவை வழங்கி வரும் சில நிறுவனங்களுடன் இணைந்து குறிப்பிட்ட இணையச் சேவைகளை மட்டும் இலவசமாக வழங்குவது அனைவருக்கும் பலன் அளிக்கும். இதை எதிர்ப்பவர்கள் ஏற்கெனவே இணைய வசதி பெற்றவர்கள்தான். நாம் இணைய வசதி அற்றவர்களின் நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வாய்ப்புள்ள இணையதளமே உண்மையான இணையதளமாக இருக்க முடியும்” என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் சொல்லி இருக்கிறார். இதைப் படிக்கும்போது உலக மக்களுக்கு உன்னதமான சேவையை, எந்தவித லாப நஷ்டங்களும் பார்க்காமல், தங்கள் எண்ணங்களைச் சுதந்திரமாகச் சொல்ல பாதைகள் அமைத்துத் தரும் சேவை நிறுவனத்தை இவர்கள் நடத்தி வருவது போன்ற தோற்றம் தெரிகிறது. ஆனால், அப

வீட்டு கடன் பற்றிய தகவல்

முதியவர்களுக்கான வீட்டுக் கடன் ! புதிதாக வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கி, மாதந்தோறும் இ.எம்.ஐ. மூலம் கடனை அடைக்கும் வீட்டுக் கடன் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், வீட்டை அடமானம் வைத்து மாதாமாதம் வங்கியிடம் இருந்து பணம் பெறும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு கடன் திட்டத்தைப் பொதுத்துறை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்’ என்றழைக்கப்படும் இந்தக் கடன் திட்டம், 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கானது. இந்தக் கடன் திட்டத்திற்கான தகுதிகள், விதிமுறைகள் என்ன என்று பார்ப்போமா? ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டம் மூலம், தன் பெயரில் வீடு இருக்கும் எந்த மூத்த குடிமக்களும் கடைசிக் காலத்தில் யார் தயவையும் எதிர்பார்க்கத் தேவையில்லை. தன் வீட்டை அடமானம் வைத்து மாதந்தோறும் பணத்தை வங்கியிடம் இருந்து பெற்றுச் செலவு செய்யலாம். அது எந்தச் செலவாக இருந்தாலும் பிரச்சினையில்லை. மூத்த குடிமக்களுக்குப் பயன் அளிக்கும் இந்தக் கடன் திட்டத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. தகுதிகள் என்ன ? # 60 வயதைக் கடந்த இந்திய மூத்த க

ராவ் இந்துத்துவ கலாச்சாரத்தின் சாம்பியன்’ Rav is the champion of Hindu culture

சிபிஐ இயக்குநர் ராவின் இந்துத்துவப் பின்னணி! மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐக்கு அவசர அவசரமாக இயக்குநராக 23ஆம் தேதி இரவு நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பற்றிய பல்வேறு புலனாய்வுத் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் அஸ்தானா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக இருவரையும் நீண்ட விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவில் ஆந்திராவைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்கிற அதிகாரியை சிபிஐ இயக்குநராக நியமித்தது. இவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, நாகேஸ்வர ராவ் முக்கியக் கொள்கை முடிவுகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான்... நாட்டின் முக்கியமான புலனாய்வுத் துறையின் இயக்குநரான நாகேஸ்வர ராவ் இந்துத்துவ இயக்கங்களின் பின்புலம் கொண்டவர் என்பதும், அவரது நண்பர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருப்பவர்கள் என்றும் தி எகனாமிக் டைம்ஸ் நேற்று (அக்டோபர் 26) செய்தி வெளியிட்டுள்ளது. ‘ராவ்... இந்து கலாச்சாரத்தின் சாம்பியன்’ என்

ஊடகங்களே! நாட்டில் பல ஊழல், ஆதிக்கம் செலுத்தும் வகையில் பல நடந்துகொண்டு இருக்கிறது அதை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள்..

தொப்பியை பூட்ஸ் மீது வைத்த காவலர்  https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/27113714/1013147/Police-kept-his-Police-cap-on-Boots-Viral-Video.vpf அவர் தொப்பியை எங்கே வைத்து இருக்கிறார் என்று குற்றம் சொல்லும் நாம் முதலில் இந்த அரசாங்கம் அவர்களை எப்படி வைத்து இருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  காவல்துறையினர் லஞ்சம் வாங்குகிறார்கள், அதிகாரதுஸ்புரயோகம் செய்கிறார்கள் என்று ஆயிரம் குற்றச்சாட்டுகள் சொன்னாலும் அவர்கள் உண்மையில் அந்த செருப்பை விட மோசமாக நடத்த படுகிறார்கள். இந்த புகைப்படத்தில் உள்ள காவல் அதிகாரி ஒன்றும் A/C அறையில் கால் ஆட்டி கொண்டு அமர்ந்து இருக்கவில்லை.  பாவம் அவர் 8 மணிநேரம் வேலை வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்று கொடுக்காமல் இவர்களை கசக்கி பிழியும் இந்த அரசுகள்தான் குற்றவாளிகள் . மக்களை காக்கும் காவலர்களை நல்ல முறையில் நடத்துவது அரசின் கடமை. ஏன் காலையும் காலில் போடும் செருப்பை கேவலமாக பார்க்கிறீர்கள் காலில்லாமல் தங்களால் ஒரு அடி நகர முடியுமா?? நம் உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளையும் தாங்கி நிற்பது கால்தானே காலும் காலில் போடும் செருப்

ஒரு காணொளியை முழுமையாக பார்க்காமல் அதற்கு கருத்து கூறுவது யாருடைய செயல்??

தோசை..! *********** தோசையிலும் சாதி உண்டு என அடித்துப் பேசியிருக்கின்றார் தோழர் மதிமாறன்.  https://m.youtube.com/watch?feature=share&v=lKTVzj4uA7w தோசையில் மட்டுமா சாதி இருக்கின்றது? தோசை மாவு அரைப்பதற்கான மிஷினிலும் சாதி இருக்கின்றது. எங்க ஊரில் இடைநிலை சாதியினருக்கு ஒரு மிஷினிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தாருக்கு ஒரு மிஷினிலும் மாவு அரைத்துத் தரப்படுகின்றது என்கிறார் சங்ககிரி ராஜ்குமார். தேநீர் குவளைகளில் கூட சாதி பார்க்கின்ற சமூகத்தில் தோசையில் மட்டும் சாதி இருக்காதா, என்ன? சாதியும் சாதிய உணர்வும் இரத்த நாளங்களில் கலந்துவிட்டிருக்கின்ற சமூகச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் நாம் என்பதுதான் உண்மை. அந்தத் தோசை உரையில் தோழர் மதிமாறன் பகிர்ந்துகொண்ட சில உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையே. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் மேல்சாதியைச் சேர்ந்தவரால் விருந்துக்கு அழைக்கப்படுகின்ற போது அவர் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகின்றார் என்பதை அழகாக விவரித்திருக்கின்றார் மதிமாறன். ‘நீங்க எந்தச் சாதி?’ என எவராவது கேட்டு விடுவாரோ என்கிற பயமும் தயக்கமும் அந்த

காவல்துறை உங்கள் புகாரை ஏற்க மறுத்தால்???

உங்கள் புகாரை காவல்துறை அதிகாரிகள் ஏற்கவில்லையா ? என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒரு புகார் கொடுக்கிறிர்கள் அதனை காவல்துறை அதிகாரிகள் ஏற்க வில்லை அல்லது விசாரிக்க வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். சட்டத்தால் குற்றம் எனக் கூறப்பட்ட ஒரு செயலைப் பற்றி பாதிக்கப்பட்ட நபரோ அல்லது தெரிந்த வேறு நபர்களோ அச்செயல் பற்றி புகார் தெரிவிக்கலாம். புகார் அளிக்கும்போது எந்த தேதியில நேரத்தில் யாரால் எவ்வாறு குற்றம் நடைபெற்றது என்பதை தெரிந்தவரை தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும். முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன? (FIR) புகாரைப் பெற்ற காவல் அதிகாரி அச்சிடப்பட உரிய படிவத்தில் புகாரையும். புகாரில் கண்ட பொருன்மைக்கு ஏற்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் நீதித்துறை நடுவர் ஒருவருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் அறிக்கையே முதல் தகவல் அறிக்கை எனப்படும். இதனைப் பற்றி வேறு கட்டுரையில் விரிவாக கொடுத்துள்ளேன். ஒரே குற்றச் சம்பவம் தொடர்பாக எதிர்-எதிர் தரப்பினர் மீது 2 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. (2001 Air SCW 2571) சாதாரண வழக்குகளில்

பாசிச மத / சாதி வெறியர்களுக்கு எப்போது முடிவு?

கொடும் கோபத்தை அடக்கியே வைத்துள்ளோம் புதைத்துவிடவில்லை  கோபம் எரிமலையாய் வெடித்தெழும் நேரம் சாம்பல்கள்தான் மிஞ்சும் வீதியில் காத்திரு பகையே. டெல்லி மாளவியா நகர் ஜாமியா அஃஸம் மத்ரசாவில் பயின்று வந்த 8 வயது சிறுவன் முஹம்மது அஸீம்  காவிக் கயவர்களால் அடித்துக்  கொல்லப்பட்டுள்ளார். https://www.facebook.com/socialmedia.socialmedia.940/videos/106015117063323/ மத்ரஸா வளாகத்தில் பொது வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த காவிக் கயவர்கள் சிறுவனைப் பிடித்து முஸ்லிம் என்ற வெறுப்பில் அடித்துள்ளனர். குழந்தை அடி தாங்காமல் அதே இடத்தில் மரண மடைந்துள்ளான். காவி வெறி நாய்களின் இது போன்ற வெறிச்செயல் ஒன்றா இரண்டா ? கடந்த நாலரை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கில் சொல்லிக்கொண்டே போகலாம்.. கண்டும் காணாமல் இருக்கிறது மத்தியில் ஆளும் பாசிச பாஜக.. காவி வெறியர்கள் தங்கள் வீரத்தை பெண்களிடம், குழந்தைகளிடமுமே காட்டுகின்றனர்.. நடுரோட்டில் நிற்க வைத்து உடலை இரண்டு துண்டாக பிளந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினால் ஒருவன் கூட குற்றம் செய்ய மாட்டான்... ஆனால் இங்கே நடப்பது என்

இளையராஜா அவர்களே உங்கள் வார்த்தையில் கவனம் தேவை! ( உங்களுக்கு நினைவு இருக்கிறதா?? )

விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று விமர்சித்த இளையராஜா https://tamil.news18.com/news/entertainment/music-director-ilayaraja-participated-in-the-ceremony-at-college-in-coimbatore-63695.html விசில் அடிப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் விசில் அடிக்கலாம் . மதுரையில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து வாய்ப்புகள் தேடியது மறந்து போச்சா ? அல்லது கம்யூனிஸ்ட் மேடைகளில் பாடி வயிற்றை கழுவியதும் மறந்துபோச்சா?? இசைஞானி இளையராஜா சமீபகாலமாக இவ்வாறு தலைகனம் பிடித்து பேசுவது  அவர் மேல் வைத்திருக்கும் மறியாதையை குறைக்கிறது. உயர உயர பறத்தாலும் ஊர் குருவி பருந்து ஆகுமா...? பாசிச கும்பலுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜால்ரா தட்டுவது எந்தவகை ராகமோ..? இசையால் அமைதியையும், அன்பையும் வளர்க்கவும்,  வன்முறை எண்ணத்தை தடுக்கவும் சக்தி உண்டு என்று அங்கலாய்க்கும் ராஜாவே மாணவர் விசில் அடித்து தங்கள் ஆதரவை தெரியப்படுத்த நினைக்கும் போது , பல ஆயிரம் ராகங்களோடு வாழ்ந்த உமக்கு அந்த பொறுமையும், அன்பும் எங்கே போய்விட்டது..?? விசில் அடித்த மாணவர்களை

பணத்தின் மீது உள்ள நம்பிக்கை கூட சக மனிதர்கள் மீது இல்லை என்பதே வேதனை..

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி  ” யாருக்கு இது' பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர். அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் த

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அ

பார்ப்பனன் vs சூத்திரன் ( சட்டம் யாருக்கு?? )

மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு  மாணவியின் தந்தை தொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கையை நவம்பர் 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம்.. ஒரே கட்சியில் பயணிக்கும் இரண்டு பேருக்கு இரண்டு விதமான தீர்ப்புகள் !!  பார்ப்பனிய  எஸ்.வி  எச்சைகளுக்கு  ஒரு தீர்ப்பு !! சூத்திர தமிழிசைக்கு ஒரு தீர்ப்பு !!  ஹைகோர்ட் ஆவது பயிர் ஆவது என்று ஹைகோர்ட் கேவலமாக பேசிய பார்ப்பனிய ராஜாவின் மீது வழக்கு பதியாத நீதிமன்றங்கள் !! சூத்திர தமிழிசையின் மீது  வழக்கு பதிவு செய்வதன் நோக்கம் என்ன என்ன ?  இதற்குப் பெயர்தான் மனுதர்மம் !! மனுதர்ம ஆட்சி நிறுவப்பட வேண்டுமென்று கூப்பாடு போடும் காவிகளே உங்களுக்கும் இதே கதிதான் மனுதர்மம் ஆட்சி பார்ப்பனர்களை  பாதுகாப்பதற்காகத்தானே அன்றி உங்களைப் (சூத்திரர்களை) பாதுகாப்பதற்கு அல்ல பூணூல் மன்னிப்பு கேட்டால் போதும் ,ஆனால் அக்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது , அப்போது புரியும்... அப்போதும் புரியவில்லை என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியா

வேலை மாற்றமா?? அப்படியென்றால் இது உங்களுக்குத்தான்

வேலையை மாற்றும்போது இ.பி.எஃப்.(எம்ப்லாயீ ப்ராவிடன்ட் பன்ட்) கணக்கையும் சேர்த்து மாற்றுங்கள்.  ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு போகிறீர்களா?  அப்படி என்றால் பழைய நிறுவனத்தில் உள்ள இ.பி.எஃப்.( எம்ப்லாயீ ப்ராவிடன்ட் பன்ட்) கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வது நல்லது. இ.பி.எஃப். கணக்கை எப்படி டிரான்ஸ்பர் செய்வது? பார்ம் 13ஐ (உங்கள் நிறுவனத்திடம் இருந்து பெறலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம்) பெறவும். அதில் உங்கள் பழைய நிறுவனம் குறித்த தகவலை அளிக்க வேண்டும். முக்கியமாக பழைய இ.பி.எஃப். கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும். புதிய நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட இ.பி.ஃப். எண்ணையும் அதில் குறிப்பிட்டு, விண்ணப்பக் கடிதத்துடன் அதை புதிய நிறுவனத்தின் ஹெச்.ஆரிடம் கொடுக்கவும். அவர் அதில் தேவையானவற்றை பூர்த்தி செய்து, உரியவர்களிடம் கையொப்பம் பெற்று பி.எப். அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.  விண்ணபக் கடிதத்துடன் கூடிய பார்ம் 13ன் ஒரு நகல் நீங்கள் வேலை பார்த்த பழைய நிறுவனத்திற்கும், மற்றொன்று பி.எப். துறைக்கும் அனுப்பப்படும். இதையடுத்து நீங்கள் வேலை பார்த்த நிறுவனத்தார்

கருத்துரிமை நசுக்கும் ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் செயல்..

கருத்துரிமை குறித்து பேசிய சமூக ஆர்வலர் பேராசிரியை சுந்தரவள்ளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் கைது கருத்துரிமை தொடர்பான உள்ளரங்க நிகழ்ச்சியில் நாட்டில் நிலவிவரும் கருத்துரிமைக்கு எதிரான அரசு மற்றும் இந்துத்துவ பாசிச சக்திகள் குறித்து பேசியதற்காக பொய்யான குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் 153,153A(1) (a), 505(1)(b), 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் கூட ஏழை மக்களை மிக எளிதா அடைந்து விடுகிறது பணக்கார முதலைகளை தொடுவதே கிடையாது.. அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளோம்  என்பதையும் நமக்கான உரிமைகளையும் அவற்றை அடைவதற்கான கொண்டாடுவதற்கான கடமையான வழிமுறகளையும்.....நேர்கொள்ளாத சமூக கூட்டத்தின் அவல/கையறு நிலையின் வெளிப்பாடு .... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் துணை செயலாளர் முனைவர் சுந்தரவள்ளி அவர்கள் மீது இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்த பின்னணியில், காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஜனநாய

மக்கள் பணத்தை பறிக்க பாஜகவிடம் பல வழிகள் உள்ளது அதில் இது ஒரு வழி

பாஜகவுக்கு நன்கொடை கேட்டு மோடி மக்களிடமும் வேண்டுகோள்... https://nakkheeran.in/24-by-7-news/india/pm-modi-sends-funds-bjp இது பகற்கொள்ளையே தவிர வேறு என்னவாம்? ஒரு காலத்தில் 'நரேந்திர மோடி' செயலியை இறக்கம் செய்து கொண்டால், மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என மக்களிடம் ஆசைகாட்டி அதை பிரபலப்படுத்தி அந்த செயலியை அநேகர் தங்கள் செல்போன்களில் தரவிறக்கம் செய்யச் செய்து விட்டு, இப்போது திடீரென்று, பாஜகவுக்கு நன் கொடை அளிப்பதானால், இந்த செயலி மூலம் அளிக்கலாம் என்று சொல்வது பகற்கொள்ளையை தவிர வேறு என்னவாம். இப்படி கேட்பதற்கு கொஞ்சம்கூட வெட்கமாக இல்ல? நாட்டில் கேட்பதற்கு நாதி இல்லையா? கோடி கோடியாக கார்ப்பரேட்டுகளிடம் நன்கொடைகளை பெற்ற ஒரு ஆளும்கட்சி 5 க்கும் 10 க்கும் ஏன் சமூக வலைதளங்களில் கையேந்த வேண்டும்..?? விடை கள்ளப்பணமெல்லாம் வெள்ளைப்பணமாவது கோயில் உண்டியல்லதான் என்பார்கள் அது டிஜிட்டல் அப்ளிக்கேஷனாகவும் இருக்கலாம்... Think About It அதாவது இந்தியாவில் ₹1034 கோடி (கணக்கில் காட்டியது மட்டும்) சொத்து மதிப்பு கொண்ட ஒரு தேசிய

சாதி வெறி ஒழியவேண்டும்! மனுநீதி அழிய வேண்டும்! சம உரிமை பெற வேண்டும்!

தொட்டால் தீட்டு என்று சொல்லும் சாதிவெறி, படுத்தால் தீட்டு எனச்சொல்வதில்லையே ஏன்? http://ns7.tv/ta/tamil-news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-tamilnadu/23/10/2018/youth-murdered-13-year-old-girl-infront-her-mother சேலத்தில் ஆத்தூர் அருகே, வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்து அறுத்துக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்து சாலையில் வீசிவிட்டுச் சென்ற காம சாதி வெறி செயல் இந்த ஆணவ கொலையை போன்று எல்லா இடங்களிலும் நடக்கும் கொலைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் பேசாத விவாதமேடைகள், உரசினான் என்று பாலியல் குற்றம் சாட்டும் நடிகைகளுக்கு ஆதரவாகப் விவாதிக்கவே நேரமிருக்கும்.  மீ டூ -  விற்கு பொங்கிய புன்னியவாள்களே மாதர் அமைப்புகளே இங்கே என் சகோதரி பாலியல் வன்புணர்வு செய்து கொடுரம்மாக கழுத்தை அறுத்து கொலை செய்யபட்டுள்ளாள் பத்திரிகையாளர்களே உங்கள் கண்கள் என்னா குருடுடாகிவிட்டதா காது என்ன செவிடாகிவிட்டதா எங்கே உங்கள் சமத்துவம் இதுதான் பெண் சுதந்திரம் பற்றி வாய்கிழியபேசும் சமுக ஆர்வளர்களே செயல்பாட்டார்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா நீதிபதி களே நீதிமன்றங்களே இதற்கு தானா