Skip to main content

இந்தியா பாகிஸ்தான் அரசியல் நாடகம்

 "இந்தியாவை மிரட்டினால் பாகிஸ்தான் துண்டிக்கப்படும்"

 - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

https://www.thanthitv.com/News/India/2018/10/14172126/1011793/Subramanian-Swamy-comment-on-Pakistan-threat.vpf

இந்தியாவை வெளியிலிருந்து மிரட்டும் பாகிஸ்தானை துண்டிப்பதைவிட இன்றிய காலகட்டத்தில் உள்ளிருந்து மிரட்டும் பார்பனியத்தை முதலில் துண்டிப்பதே இக்காலத்தின் அவசர தேவையாக உள்ளது.

நாய்க்கு வால் எப்படி அவசியமோ அப்படித்தான் இந்தியாவுக்கு பாக்கிஸ்த்தான்

அங்கே வாலை ஆட்டினால் இங்கே வாலை சுருட்டிக்கொள்வதும்..

இங்கே வாலை ஆட்டினால் அங்கே வாலைச்சுருட்டிக்கொள்வதும்

எப்போதும் சொல்லிவைத்துக்கொண்டே நடக்கும் ஒரு வேடிக்கை..

விளையாட்டுத்தான் இருநாடுகளுக்கு இந்த ஒரு வால்
இல்லை என்றால் அரசியலே செய்ய முடியாது..

இரு நாட்டு வால்களும் ஒன்றை ஒன்று கட்டி பிடித்து முத்தம் கொடுத்து பிரியாணி சாப்பிடுவதும்  மாம்பழக்கூடைகளை பரிமாறி கொள்வதும் பட்டுச்சேலைகளை பரிசளித்து கொள்வதும் சகஜமான சங்கோஜமே இல்லாத காரியமாகவே நடந்து கொண்டே தானிருக்கிறது..

ஆனால் வெளியில் வந்த உடன் இருவால்களும் மக்களுக்கு மத்தியில் உர் உர் என்று ஒன்றை பார்த்து ஒன்று குரைத்து கொண்டே இருக்கும்.

ஆனால் இரண்டுமே மோதி கடித்து கொள்ளாது.

இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு இருப்பது மக்கள்தான் என்பதை நாம் எப்போது உணர போகிறோம்...

Comments