Skip to main content

அக்டோபர் - 15 மரனம் கூட மன்டியிட்டது மாவீரர் மருதநாயகம் தூக்கிலிடப்பட்ட நாள்

மரனம் கூட மன்டியிட்டது  மாவீரர்  மருதநாயகம் தூக்கிலிடப்பட்ட நாள் அக்டோபர் - 15



'மருதநாயகம்' என்னும் ஒற்றைப் பெயர் திரை உலகிலும் சரி ,

இந்தியர்களின் விடுதலை வரலாற்றிலும் சரி

ஒரு கலக்கு ,கலக்கிக் கொண்டிருக்கும் 'வீரத்தின்'அடையாளம் .

என்ன தான் கமல் நடிப்பில் பல படங்கள் இன்று வெளியிடப்பட்டாலும்....

கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இன்றும் எதிர்நோக்கும் ஒரு பெரியபடம் -'மருதநாயகம் ' என்றால் அது மிகையல்ல .

அத்தகைய மருதநாயகத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணிதான் என்ன..???

தெரிந்து கொள்வோம்....

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில்....
இந்து - வேளாளர் இனத்தில் பிறந்தவர், மருதநாயகம்.

பின் தன்னுடைய இளமைப் பருவத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை விரும்பி ஏற்று... 'முகமது யூசுப்கான்' என அழைக்கப்பட்டார்.

தன் இளமைக்காலத்தில் பிரெஞ்சுக் காரர்களின் படையில் வேலை பார்க்கும் போது தமிழ், பிரெஞ்சு ,போர்த்துக்கீசியம், ஆங்கிலம் , உருது ஆகிய மொழிகளைக் கற்று தேர்ந்தார்.

1750 -களில் ஆங்கிலேயருக்கும் ,பிரெஞ்சுக் காரர்களுக்கும் நாடுபிடிக்கும் போர் நடந்தபோது...

யுத்தத்தில் முகமது யூசுப்கானின் திறமையைக் கண்டு வியந்த" ராபர்ட் கிளைவ்"
அவரை தன் படையில் இணைத்து, ஐரோப்பிய முறையில் ராணுவ பயிற்சி கொடுக்க உதவினார்.

1752 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஆற்காடு முற்றுகையின் போது, முகமது யூசுப்கான் எனும் 'மருதநாயகம்' சிறந்து விளங்கவே ,சிப்பாய் படைகளுக்கு தளபதியாகி கான்சாகிப்' எனும் பட்டம் பெற்றார்.

மேலும் தன்
துணிவான செய்கையால், 1755-ஆம் பாளையக்காரர்களை அடக்கி, கப்பம் வசூல் செய்ய அனுப்பி வைக்கப்பட்டார்.

கப்பம் சரியாக வசூல் செய்து கொடுத்ததால், 1759-ஆம் ஆண்டு மதுரை -நெல்லையின் கவர்னராக, ஆங்கில அரசில் அங்கம் வகித்தார்.

1758-ல் ஆங்கிலேயருக் கெதிராக சென்னையை முற்றுகையிட்ட பிரெஞ்சுபடைகளை யூசுப்கான் கொரில்லா தாக்குதல் நடத்தி தோற்கடித்தார்.

இதனால் 'கமாண்டோகான்' எனும் பதவி உயர்வு பெற்றார்.

இதற்காக கவர்னர் பதவியில் நீடிக்க வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் ஆங்கிலேயே அரசுக்கு கட்ட வேண்டியிருந்தது.

அலுவல் காரணமாக மருதநாயகம் சென்னை சென்றபோது, சில கயவர்கள் மீனாட்சியம்மன் கோவில் நிலங்களை சூறையாடியனர்.

இதனையறிந்து திரும்பிய மருதநாயகம், கயவர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

மேலும் பல குளங்கள், கோட்டைகள் ஆகியவற்றை பழுது நீக்கினார்.

இதனால் யூசுப்கானுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.

அதைத் தடுக்க எண்ணிய ஆங்கிலேயே அரசு, ஆற்காட்டு நவாப்பின் பணியாளர்தான் 'மருதநாயகம்' என ஆணை பிறப்பித்தது.

இதனால் நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் மேல் மிகுந்த மனக்கசப் படைந்தார் மருதநாயகம்.

இந்நிலையில் மருதநாயகம் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வைத் தூண்டுவதாக குற்றம் சாட்டி ,அவரை கைது செய்ய உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு .

இதனால் ஆங்கிலேயர்கள் மேல் நம்பிக்கையிழந்த மருதநாயகம், தன்னை 'சுதந்திர ஆட்சியாளன் 'எனப் பிரகடனப் படுத்திக்கொண்டு,
27,000 வீரர்களை வைத்து படையை பலப்படுத்தினார்.

இது அக்காலத்தில் திரட்டப்பட்ட மிகப்பிரமாண்டமான படைகளில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

அதன் பின்னர் 1763 -ஆம் ஆண்டு , மதுரையில் ஆங்கிலேயர் படையை வென்று ஆங்கிலேயர் கொடியை இறக்கி, தனது மஞ்சள் நிறக்கொடியை அக்கோட்டையில் ஏற்றினார் மருதநாயகம்.

இதனால் மருதநாயகத்தை வீழ்த்த சரியான சமயம்பார்த்த ஆங்கிலேய அரசும்,  நவாப் அரசும்...
1764-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மருதநாயகத்தின் கோட்டையை முற்றுகையிட்டன.

இருந்தாலும் பின் வாங்காமல் அசராமல் போர் புரிந்தன மருதநாயகத்தின் படைகள்.

பின்னர் தோல்வியிலிருந்து மீள தந்திரமாக யோசித்த ஆங்கிலேய அரசு, மருதநாயகத்தின் கோட்டைக்குச் செல்லும் உணவு, குடிநீரை தடுத்து நிறுத்தினர்.

இதனால் படைவீரர்கள் சோர்வடைந்தனர்.
இறுதியாக மருதநாயகம்...
13-10-1764 -ஆம் நாள் தொழுகையின் போது பிடிபட்டு, அக்டோபர் 16 ஆம் தேதி, அதிகாலை மதுரை -சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
 தூக்கிலிடப்பட்ட பின்னரும்,  பல மாயாஜாலங்கள் செய்து உயிர்த்தெழுந்து வந்துவிடுவான் என நம்பிய ஆங்கிலேய அரசு,

அவரது உடலை பல பாகங்களாக வெட்டி, பல்வேறு இடங்களில் புதைத்தது.

அவ்வாறு வெட்டப்பட்ட...

தலையை திருச்சியிலும்,

கைகளை நெல்லை பாளையங் கோட்டையிலும்,

கால்களை தேனி மாவட்டம் பெரிய குளத்திலும்,

உடலினை மதுரை -சம்மட்டிபுரத்திலும்...
அடக்கம் செய்தது.

இதில் அவரின் கால்பகுதி, தேனிமாவட்டம்  பெரியகுளம் வடகரை தர்ஹாவில் புதையுண்டு  இருப்பது, பலரும் இன்னமும் அறியாத செய்தி.

இன்றும் உண்மையின் மிளிர்கல்லாக எஞ்சி இருக்கும்,  இது போன்ற பல இடங்களை நாமும் பேணி காத்து, பல தலை முறைகளுக்கு,  பல வீரர்களின் உண்மை வரலாற்றைக் கடத்துவோம்...!

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...