Skip to main content

அமீரக சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகள் காத்திருக்க தேவையில்லை

துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகள்


          இனிமுதல் பாஸ்போர்ட் இன்றி சில நொடிகளில் இமிக்கிரேசன் கடமைகளை முடிக்க முடியும்......

       துபாய் பல்வேறு அதிநவீன வசதிகளை அனைத்து துறைகளிலும் தொடர்ந்து அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது வழக்கம்
        இதன் இன்னோரு புதிய வசதியாக துபாய் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இன்றி ஸ்மார்ட் டனல் வழியாக சில நொடிகளில் இமிக்கிரேசன் கடமைகளை முடிக்கலாம் என்ற புதிய வசதியை நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது.
           துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் ஆரம்பகட்ட சோதனை அடிப்படையில் முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு  ஸ்மார்ட் டனல் எனும் தானியங்கி இமிக்கிரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு இது விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
         ஸ்மார்ட் டனல் வழியாக வரும் உங்களுடைய முகத்தை ஆட்டோமெட்டிக்காக ஸ்கேன் செய்தே இமிக்கிரேசன் காரியங்களை முடித்துக் கொள்ளலாம், இதற்காக உங்களுடைய பாஸ்போர்ட், அடையாள அட்டை, போர்டிங் கார்டு போன்ற எதுவும் தேவையில்லை. இந்த ஸ்மார்ட் டனல்‌ இமிக்கிரேசன் பணிகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் ஒரு சில நொடிகள் மட்டுமே.

ஸ்மார்ட் டனல் எவ்வாறு செயல்படுகிறது:
1. ஏற்கனவே ஸ்மார்ட் கேட்  முறையை பயன்படுத்தியவர்கள் தொடர்ந்து ஸ்மார்ட் டனல் முறையை உபயோகிக்கலாம்.

2. ஸ்மார்ட் கேட் உபயோகிப்பாளர்களின் தனிநபர் விபரங்கள் ஏற்கனவே கம்ப்யூட்டரில் பதிவாகியிருப்பதால் ஸ்மார்ட் டனலுக்காக மீண்டும் பதிய வேண்டியதில்லை.

3. ஸ்மார்ட் கேட்டுக்காக முன்பதிவு செய்திடாதவர்கள் ஏர்போர்ட்டில் இதற்கென உள்ள 2 தானியங்கி இயந்திரங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இமிக்கிரேசன் கவுண்டருக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

4. முதன்முதலாக ஸ்மார்ட் டனலை பயன்படுத்தும் பயணிகள் ஒருமுறை இமிக்கிரேசன் கவுண்டரில் பாஸ்போர்ட்டை பரிசோதித்துக் கொண்டு செல்ல வேண்டும் மறுமுறை என இனி எப்போதும் பாஸ்போர்ட்டை பரிசோதித்துக் கொள்ள தேவையில்லை.

5. அதேபோல் பயணிகள் தங்களுடைய பாஸ்போர்ட் குறைந்தது

6 மாதமாவது செல்லுபடியாகக்கூடியதாக இருக்க வேண்டும் ஏனெனில் உங்களுடைய பயணம் வேறு நாடுகளுக்கு தொடரும் நேரத்தில் திருப்பியனுப்பப்பட வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...