தோசை..!
***********
தோசையிலும் சாதி உண்டு என அடித்துப் பேசியிருக்கின்றார் தோழர் மதிமாறன்.
https://m.youtube.com/watch?feature=share&v=lKTVzj4uA7w
தோசையில் மட்டுமா சாதி இருக்கின்றது? தோசை மாவு அரைப்பதற்கான மிஷினிலும் சாதி இருக்கின்றது. எங்க ஊரில் இடைநிலை சாதியினருக்கு ஒரு மிஷினிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தாருக்கு ஒரு மிஷினிலும் மாவு அரைத்துத் தரப்படுகின்றது என்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
தேநீர் குவளைகளில் கூட சாதி பார்க்கின்ற சமூகத்தில் தோசையில் மட்டும் சாதி இருக்காதா, என்ன? சாதியும் சாதிய உணர்வும் இரத்த நாளங்களில் கலந்துவிட்டிருக்கின்ற சமூகச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் நாம் என்பதுதான் உண்மை.
அந்தத் தோசை உரையில் தோழர் மதிமாறன் பகிர்ந்துகொண்ட சில உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையே.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் மேல்சாதியைச் சேர்ந்தவரால் விருந்துக்கு அழைக்கப்படுகின்ற போது அவர் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகின்றார் என்பதை அழகாக விவரித்திருக்கின்றார் மதிமாறன்.
‘நீங்க எந்தச் சாதி?’ என எவராவது கேட்டு விடுவாரோ என்கிற பயமும் தயக்கமும் அந்த விருந்தாளியின் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கும்.
அமர்வில் இருக்கின்ற போது, உணவு அருந்திக் கொண்டிருக்கின்ற போது, தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கின்ற போது, சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்ற போது, சகஜமாக உரையாடிக் கொண்டிருக்கின்ற போது ‘அந்தக் கேள்வி வந்துவிடுமோ?’ என்கிற பயமும் அய்யமும் அவருடைய மனத்தைத் துளைத்துக்கொண்டே இருக்கும் என்கிறார் மதிமாறன்.
அடுத்து இன்னொன்றையும் மதிமாறன் குறிப்பிட்டுள்ளார். இந்த மன உளைச்சலும் பயமும் தயக்கமும் இஸ்லாமியர்களின் விருந்துகளில் கலந்துகொள்கின்ற போது வருவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்த நுட்பமான, அழகான, கனமான வித்தியாசத்தை போகின்ற போக்கில் தோழர் மதிமாறன் சுட்டிக்காட்டியிருக்க, முகநூல் போராளிகளோ ‘தோசையிலேயே’ முடங்கிவிட்டார்கள்.
டெய்ல் பீஸ் : தோசைக்கு எது சரியான காம்பினேஷன், தெரியுமா?
(1) மட்டன் குழம்பு (2) சிக்கன் குழம்பு (3) பீஃப் ஃபிரை (4) பேஜா பெப்பர் ஃபிரை (5) ஆஃப் பாயில் பெப்பர் (6) மட்டன்-வெண்டைக்காய் குழம்பு (7) மட்டன்-பீட்ரூட் குழம்பு (8) மட்டன் பெப்பர் ஃபால்(சுக்கா) (9) டபுள் ஆம்லெட் (10) பத்தாவதை நீங்களே சொல்லுங்கள்.

Comments
Post a Comment