மோடி எனும் கேடியின் சுயரூபம் - ஒரு சின்ன பிளாஷ்பேக்‼️
இரத்த ஆறு ஓடிய கலவரம்
• 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் கொடூரமாக 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
ஆயுதங்களுடன் வெறியாட்டம் போட்ட கும்பலை தடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு மோடி உத்தரவிட்டார் என்று மாநில காவல்துறை உயரதிகாரியே குற்றம்சாட்டுகிறார்.
விசாரணைக் குழுவின் முன் இந்த உண்மையை அம்பலப்படுத்தினார், மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹரேன் பாண்டியா எனும் அமைச்சர்.
அதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் அவர் கொலை செய்யப்பட்டார்.
ஹரேன் பாண்டியாவின் தந்தை, தனது மகன் கொலைக்குக் காரணம் மோடிதான் என்று குற்றம்சாட்டினார்.
குற்றத்தை மறைக்க இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி என்றார் மோடி.
சதிக்கு உடந்தை என்று 17 அப்பாவி முஸ்லீம்களை கைது செய்தார்.
அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று நீதிமன்றமே விடுதலை செய்துவிட்டது.
உண்மையில் நடந்தது என்ன?
ஹரேன் பாண்டியாவின் கொலையில் சோரப்தீன் என்ற ரவுடியை கூலிப்படையாக பயன்படுத்தினார்கள்.
பிறகு அவரையும் கொலை செய்தார்கள்.
அதை மறைக்க அவரது மனைவி கவுசர் பீ-யையும் கொலை செய்து எரித்து விட்டார்கள்.
இந்த உண்மைகளைத் தெரிந்தவர் இன்னொரு ரவுடி துளசி பிராஜபதி அவரையும் கொன்றார்கள்.
இத்தனை கொலைகளையும் செய்தவர்கள் உயர் போலீஸ் அதிகாரிகள்.
• நரோ பாட்டியா என்ற இடத்தில் 69 இஸ்லாமியர்களை படுகொலை செய்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் - மோடியின் அமைச்சரவையில் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயாகோத்னானி என்ற பெண்.
• மோடியை கொலை செய்ய பாகிஸ்தான் சதி என்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கியது மோடியின் காவல்துறை.
இதற்காக இர்ஷத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உள்ளிட்டோர் ‘போலி என்கவுண்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அது போலி என்கவுண்டர் என்பது உறுதியானதால், மோடி ஆட்சியின் 32 காவல்துறை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல்துறை தலைமை அதிகாரி வன்சாரா, சிறையிலிருந்து மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
‘உங்கள் அரசாங்கம் கூறித் தானே நாங்கள் கொலை செய்தோம்.
தண்டனை எங்களுக்கு மட்டும் தானா?
அரசாங்கத்துக்கு இல்லையா?” என்று கேட்டார்.
இந்தியாவை காக்கவே ‘அவதாரம்’ எடுத்து வந்ததாகக் கூறப்படும் மோடியிடமிருந்து இதற்கு பதிலைக் காணோம்.
குஜராத் கலவரத்தில் மோடிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரது சீடர்கள் பேசி வருகிறார்கள்.
தான் பயணம் செய்யும் காரில் ஒரு நாய்க்குட்டி சிக்கினால் ஏற்படும் வேதனைதான் தனக்கு ஏற்பட்டது என்கிறார் மோடி.
2000 இஸ்லாமியர் படுகொலைகளை நாய்க்குட்டியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அவ்வளவு ‘பரந்த உள்ளம்’ மோடிக்கு இருக்கிறது! இது மத வெறித் திமிர் தானே?
பாஜக தலைவர் ராஜ்நாத்கோ இந்தப் படுகொலைக்கு மோடி மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
மோடி அதற்காக வருத்தமோ மன்னிப்போ கேட்கத் தயாராக இல்லை.
அது மட்டுமல்ல; கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவம் நடந்தது 2002, பிப்.27. இந்த எரிப்புக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை.
ஆனால், எரிப்புச் சம்பவம் நடந்த அடுத்த நாளே மோடி மாநில அரசு நடத்தும் தொலைக்காட்சியில் பேசினார்.
குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப் படுவார்கள் என்று ஒரு முதலமைச்சர் பொறுப்போடு கூறியிருந்தால் அது நியாயமானது.
ஆனால் முதல்வர் மோடி என்ன பேசினார்?
“இது போன்ற சம்பவங்களை குஜராத் சகித்துக் கொண்டிருக்காது என்று குஜராத் மக்களுக்கு உறுதி கூறுகிறேன்.
குற்றவாளிகள் - அவர்கள் செய்த ‘பாவ’த்துக்கு முழுமையான தண்டனை பெறுவார்கள்.
அத்துடன் முடித்துவிட மாட்டோம்.
இதுபோன்ற கொடும் குற்றங்களை இனி எவரும், கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலையை உருவாக்குவோம், அதற்கு முன்னுதாரணமாக நிற்போம்” - என்றார் மோடி.
சட்டப்படியான நடவடிக்கைகளையும் மீறி, “குற்றங்களுக்கு” பாடம் கற்பிப்போம்.
கனவிலும் இனி எவரும் இதை நினைத்துப் பார்க்கக் கூடாது என்று ஒரு முதல்வரின் பேச்சு எதைக் காட்டுகிறது?
அதே நாளில் குஜராத் சட்டமன்றத்திலும் இப்படியே பேசினார்.
“இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்டிக்கும் நடவடிக்கைகள் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது”என்று பேசினார் மோடி!
கலவரத்தை இனப்படுகொலையை ஒரு முதல்வரே தூண்டிவிட்டார் என்பதற்கு, இந்தப் பேச்சே போதுமான ஆதாரம்!

Comments
Post a Comment