அப்ஸல் பாத்திமா B.com BL(Hons) அவர்கள் TNPSC நடத்திய CIVIL JUDGE தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்ச்சி பெற்ற 230 நீதிபதிகளில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்கள்....
பெண்கள் கல்வியில் இன்னும் அதிகம் முன்னேற வேண்டும். எவ்வளவு முன்னேற்றம் இருந்தாலும் இஸ்லாமிய வாழ்வு முறையை கல்லூரிகளிலும் பணி புரியும் இடங்களிலும் கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்.
அப்போதுதான் ஈருலகிலும் வெற்றி பெற முடியும்.
முஹம்மது (ஸல்) அவர்கள் கல்வியை அறிவாகப் பெற்று மக்களுக்குப் பயனளிக்கும் நபரைக் குறித்து ஓர் அழகிய உதாரணம் மூலம் விளக்குகின்றார்கள்,
“நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி வைத்ததற்கு உதாரணம் பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி தண்ணீரை ஏற்றுக் கொண்டு செடி, கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும் அதிலிருந்து குடித்தார்கள். (கால்நடைகளுக்கும்) குடிக்கக் கொடுத்தார்கள். விவசாயம் செய்தார்கள். அந்த பூமியின் மற்றொரு பகுதி கட்டாந்தரையாகும். அது தண்ணீரையும் தேக்கி வைக்காது. செடிகளையும் முளைக்கச் செய்யாது. இதில் முதல் உதாரணம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் என்னை அனுப்பி வைத்த மார்க்கம் மூலம் பயனளித்து (அதாவது) தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவனுக்குரிய உதாரணமாகும். (கட்டாந்தரைக்கு உதாரணம்) மார்க்கத்தின் பக்கம் தன் தலையைக் கூடத் திருப்பாமல் அல்லாஹ் என்னை எதன் மூலம் அனுப்பினானோ அந்த வழியை ஒப்புக்கொள்ளாமல் இருப்பவனுக்கு உதாரணமாகும்.”
(அபூ மூஸா (ரலி), புகாரி - 79, முஸ்லிம் 2282)
ஒருவன் கல்வியை அறிவாகப் பெற்று சமூக நலனுக்காக அதனை பயன்படுத்தும் போதுதான் அவனிடமிருந்து புதிய கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், அறிவுகள் தோன்றுகின்றன.
இப்படிக் கல்வி பயில்பவன் தான் விஞ்ஞானியாகவோ, கண்டு பிடிப்பாளனாகவோ, சமூக ஆர்வலனாகவோ உயர இயலும்.

Comments
Post a Comment