Skip to main content

கேவியட் மனு தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள்

கேவியட் மனு தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் 


கேவியட் மனு, அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும்போது, இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்
கேவியட் மனுவை சாதாரண முறையில் தாக்கல் செய்திடும்போது, இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்
மனு தாக்கல்
மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரையில் (Caveat Petition) கேவியட் மனு படிவம் ஒரே மாதியானதாகவே இருக்கும்.

நபர் ஒருவருக்கு எதிராக, மற்றொரு நபர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலோ (District Munisif Court), மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் மன்றத்திலோ (District Munisif Cum Magistrate Court), சார்பு நீதிமன்றத்திலோ (Sub Court), மாவட்ட நீதிமன்றத்திலோ (District Court), உயர்நீதிமன்றத்திலோ (High Court), தடையாணை (Stay Order) அல்லது உறுத்துக்கட்டளை (Injection Order) யை அவசரத்தன்மையுடன் (Emergent Petition) அறிவிப்புக் கொடுக்காமல் பெற்றிடுவதற்கு வாய்ப்புண்டு என்று கருதிடும் சூழ்நிலையில் நபர் ஒருவர் கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம்.

* மேல்முறையீட்டுக் காலங்களிலும் கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம். அதற்கான படிவமும் இதே மாதிரியானதாகும்.

* கேவியட் மனுவை அவசரத்தன்மையுடனோ அல்லது சாதாரண நிலையிலோ தாக்கல் செய்யலாம்.
அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவை, அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டுடன் இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டும். சாதாரணமாக தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவுக்கு அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டை இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

* கேவியட் மனுவை அவசரத்தன்மை மனுவுடன் கொடுத்தால் மனு சரியாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அன்றைய தினமே எண் கொடுத்து விடுவார்கள்.

* கேவியட் மனுவை சாதாரணமாக தாக்கல் செய்தால், அடுத்தடுத்த நாட்களில்தான் எண் கொடுப்பார்கள்.
*
கேவியட் மனுசாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும்போது, அந்த மனுவில் எண் கொடுப்பதற்கு முன்னர், நபர்கள் எவரும் தமது வழக்கை அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்து தடையாணை அல்லது உறுத்துக் கட்டளையைப் பெற்றிட முடியும்.

* கேவியட் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர், அசல் மனுவில் மனுதாரரிடம் கையொப்பத்தைப் பெறுதல் வேண்டும். நகலில் மனுதாரரின் மையொப்பத்தைப் பெறுதல் கூடாது. நகலில் உண்மை நகல் அல்லது T.C (True Copy) என்று குறிப்பிட்டு மனுதாரரின் வழக்கறிஞர் மட்டும் கையொப்பம் இட்டால் போதுமானதாகும். ஆனல், அசல் கேவியட் மனுவில் மனுதாரரும், வழக்கறிஞரும் கையொப்பம் இடுதல் வேண்டும். நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை ஒட்டப்படுதல் வேண்டும்.

* கேவியட் மனுவின் நகல் ஒன்றை எதிர் மனுதாரருக்கு மனுதாரரின் வழக்கறிஞர் பதிவு அஞ்சலில் ஒப்புகை அட்டை இணைப்புடன் அனுப்பி வைத்தல் வேண்டும். பதிவு அஞ்சல் உறை மற்றும் ஒப்புகை அட்டையின் பெறுநர் முகவரியில் எதிர்மனுதாரரின் முகவரியையும், அனுப்புனர் முகவரியில் மனுதாரரின் வழக்கறிஞரின் முகவரியையும் குறிப்பிடுதல் வேண்டும்.

* கேவியட் மனுவின் நகலை எதிர்மனுதாரருக்கு அனுப்பி வைத்த பின்பே கேவியட் அசல் மனுவை நீதிமன்றத்தில் தக்கல் செய்ய வேண்டும்.

* கேவியட் மனு, அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும்போது, இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்

* கேவியட் அசல் மனு (Caveat Original Petition),
எதிர்மனுதாரருக்குப் பதிவுத் தபாலில் கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச் சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு (Postal Receipt),
வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat),
அவசரத்தன்மை மனு (Emergent Petition) ,
அபிடவிட் (Affidavit)
ஆகியவற்றைத் திறந்த நீதிமன்றத்தில் (Open Court) நீதிபதியிடம் கொடுத்தல் வேண்டும்.

கேவியட் மனுவை சாதாரண முறையில் தாக்கல் செய்திடும்போது, இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்

கேவியட் அசல் மனு (Caveat Original Petition),
வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat),
எதிர் மனுதாரருக்கு கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச் சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு (Postal Receipt)
ஆகியவற்றை தலைமை எழுத்தர் (Head Clerk) அல்லது செரஸ்தாரிடம் (Sheristadar ) கொடுத்தால் போதுமானதாகும்.

மனுக்கள், அபிடவிட், வழக்குரைக்கும் ஆவணம் ஆகியவற்றின் மேலுரையில் வழக்கறிஞர் பெயர், ஊர், நீதிமன்றம், மனு விபரம் ஆகியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும். அஞ்சல் பற்றுச் சீட்டை தனியே ஒரு வெள்ளைத்தாளில் இணைத்து, அந்த வெள்ளைத்தாளில் மேல்குறிப்பை (Docket) எழுதுதல் வேண்டும். கேவியட் அசல் மனுவில் வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில் வழக்கறிஞர் நல நிதி முத்திரை வில்லையுடன், அவசரத்தன்மை மனுவில் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை ஒட்டுதல் வேண்டும். அபிடவிட்டில் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை ஒட்ட வேண்டிய அவசியமில்லை.

கேவியட் மனுவில் வாத-பிரதிவாதங்கள் கேட்கப்பட மாட்டாது. அதனால், அதில் எதிர்மனுதாரர் கட்சியாடுகின்ற வகையில் எதிர்வுரையோ, பதிலறிவிப்போ செய்ய வேண்டியதில்லை. ஒருமுறை தாக்கல் செய்யப்படுகின்ற கேவியட் மனு மூன்று மாதங்கள் வரையில் மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு புதிதாகத்தால் கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும். கேவியட் மனு இரண்டாவது முறையாக அல்லது அடுத்தடுத்து எத்தனை முறை தாக்கல் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் பின்பற்றப்படும் அதே நடைமுறையையே பின்பற்றுதல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...