Skip to main content

கருத்துரிமை நசுக்கும் ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் செயல்..

கருத்துரிமை குறித்து பேசிய சமூக ஆர்வலர் பேராசிரியை சுந்தரவள்ளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் கைது



கருத்துரிமை தொடர்பான உள்ளரங்க நிகழ்ச்சியில் நாட்டில் நிலவிவரும் கருத்துரிமைக்கு எதிரான அரசு மற்றும் இந்துத்துவ பாசிச சக்திகள் குறித்து பேசியதற்காக பொய்யான குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் 153,153A(1) (a), 505(1)(b), 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் கூட ஏழை மக்களை மிக எளிதா அடைந்து விடுகிறது பணக்கார முதலைகளை தொடுவதே கிடையாது..



அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளோம்  என்பதையும் நமக்கான உரிமைகளையும் அவற்றை அடைவதற்கான கொண்டாடுவதற்கான கடமையான வழிமுறகளையும்.....நேர்கொள்ளாத சமூக கூட்டத்தின் அவல/கையறு நிலையின் வெளிப்பாடு ....

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் துணை செயலாளர் முனைவர் சுந்தரவள்ளி அவர்கள் மீது இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்த பின்னணியில், காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் அதிமுக அரசு, கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைகளை பறிக்கும் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மாற்றுக் கருத்துக்களை ஏற்க முடியாத இந்த அரசு திருமுருகன் காந்தி, வளர்மதி,  சோபியா, நக்கீரன் கோபால் உள்ளிட்டு பலரை கைது செய்தது.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மக்கள் அமைப்புகளின் ஊழியர்கள் மீதும் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது முனைவர் சுந்தரவள்ளி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும் இல்லையென்றால் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம்..

அடக்குமுறைக்கு பயந்தவர் அல்ல தோழர் சுந்தரவள்ளி பாசிச பாஜக ஒழிக பாசிச பாஜக-வின் அடிமைகள் ஒழிக வன்மையாக கண்டிக்கிறோம்.

- IRA

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...