Skip to main content

முதல்வர் பழனிச்சாமி- க்கு இந்த பதிவு!

தலித்கள் என்ன அடிமைகளா தமிழக முதல்வரே  பதில் உரையுங்கள்? 


   
  சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர் செங்கோடகவுண்டர் என்பவர் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களை வரவேற்க  வட்டவடிவ விளம்பரதட்டி கட்டி அதில் மின்விளக்குகள் பொருத்தி வரவேற்க கூலி வேலை செய்ய அந்த பகுதியில் உள்ள தலித் இளைஞர்களான ராஜவேலு (27) மணிகண்டன்(22) ஆகிய இருவரையும் அழைத்துசென்று உள்ளார் அவர்கள் அந்தபணியில் நேற்று காலை 3.30மணி அளவில் ஈடுபட்டுகொண்டுஇருந்தபொழுது மின்சாரம் தாக்கி கீழே தூக்கி எறியப்பட்ட நிலையில் சேலம் மோகன்குமாரமங்கலம்அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்


இதில் ராஜவேலு இன்று மதியம் இறந்துவிட்டார் மணிகண்டன் தீவிரசிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு கை ஒரு கால் அறுவைசிகிச்சைமூலம் நீக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். சம்பவத்தை கேள்விபட்டு விடுதலைசிறுத்தைகள்கட்சியின் சேலம் மாவட்டபொருளாளர் தோழர் காஜாமைதீன், மாநிலபொறுப்பாளர் தோழர்  சௌ.பாவேந்தன்,,வடக்குமாவட்டசெயலாளர் சேட்டு, தமிழ்நாடுஒடுக்கபட்டோர்வாழ்வுரிமை இயக்கத்தின் சேலம்மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் ஜெ. கணியன்பூங்குன்றன்,  அனைத்திந்திய இளைஞர்பெருமன்றசேலம்மாவட்டசெயலாளர் தோழர் இரா. ரமேஷ்,  பகுஜன்சமாஜ் கட்சியின் சேலம் மாவட்டதலைவர் வழக்கறிஞர் தோழர் பார்த்திபன், இந்தியதேசியகாங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகரம் ஆண்டிபட்டி ஜிம் ராஜீ உள்ளிட்ட பல்வேறு தோழர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் இறந்த ராஜவேலு மரணத்திற்கு நியாயம்வேண்டியும் பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு இழப்பீடு வழங்கவேண்டியும் அரசு மருத்துவமனை வாயில் முன்பு வாயில்முழக்கப்போராட்டம் நடத்தினோம் தலித் மக்களின் உயிர் என்பது சர்வசாதாரணமாக போய்விட்டதை போல் அதிமுக கட்சிகாரர்களின் செயல்பாடு அமைந்து உள்ளது.



 வேலை செய்ய அழைத்து சென்ற அதிமுக பிரமுகர்கள் ஒருவர்கூட மருத்துவமனை பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை தமிழக முதல்வர் மாவட்டம் முதல்வரின் வருகைக்காக வைக்கப்பட்ட விளம்பரதட்டிகளால் யாருக்கு பயன் இரண்டு உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தான் உண்மை உயர்நீதி மன்றம் உத்தரவுஇட்டும் அதிகாரவர்க்கம் இன்னும் விளம்பரதட்டிகலாச்சாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை அந்த குடும்பம் இப்பொழுது கண்ணீர்நிறைந்து அழுதுகொண்டு இருப்பதை பார்க்க முடியவில்லை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தியகம்யூனிஸ்ட்கட்சி, விடுதலை சிறுத்தைகளின், காங்கிரஸ், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர்வாழ்வுரிமை இயக்கம், பகுஷன்சமாஜ்கட்சி, மற்றும் முற்போக்கு சக்திகள் களத்தில் நிற்போம்  நியாயத்தை வென்று எடுப்போம்.... 

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...