Skip to main content

ராகுல் காந்தியின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மிக சிறப்பு இது எப்போதும் தொடர வேண்டும்

என்ன ஒரு அருமையான கருத்து நிச்சயம் இந்தியாவை ஆள தகுதி பெற்ற தலைவர் ஆகிவிட்டார் ராகுல் காந்தி. கழுசடைகளை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புவோம்



“என் பாட்டி (இந்திரா காந்தி) கொல்லப்பட்டார். 

என் தந்தை (ராஜீவ் காந்தி) கொல்லப்பட்டார். 

இப்போது, நானும் ஒரு நாள் கொல்லப்படலாம்.

 ஆனால், அதற்கு நான் அஞ்சவில்லை. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை. முசாபர்நகர் மக்களின் துயரத்தில் என் முகத்தைப் பார்க்கிறேன்.

என் இதயத்தில் இருந்து சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அப்போது, நான் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தேன். என் ஆசிரியரிடம் ஒருவர் ரகசியமாக ஏதோ சொல்வதைப் பார்த்தேன்.

அதைத் தொடர்ந்து, என்னை உடனடியாக வீட்டுக்குப் போகுமாறு என்னிடம் ஆசிரியர் சொன்னார். வீட்டுக்குச் சென்றபோது, எங்கள் பணியாளர்களின் அலறலைக் கேட்டேன். என் பாட்டிக்கு ஏதோ நிகழ்ந்துவிட்டது என்று யாரோ சொன்னார்கள்.

வீட்டுக்குச் சென்றபோது, சாலையில் என் பாட்டியின் ரத்தத்தையும், ஓர் அறையில் சவாந்த் சிங் மற்றும் பீந்த் சிங் ஆகிய இரு பாதுகாவலர்களின் ரத்தத்தையும் கண்டேன். அவர்கள் என்னிடம் எப்போதும் நட்புடன் பழகியவர்கள். அந்த நிகழ்வு என்னைத் தாக்கியது. என்னுடைய கோபம் தணிவதற்கு 10-ல் இருந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது.

என்னை சமீபத்தில் ஒரு எம்.எல்.ஏ. (பஞ்சாபைச் சேர்ந்தவர்) சந்தித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அவர் கொல்ல நினைத்ததாகவும், ஆனால் இப்போது கட்டியணைக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறினார்.

 அப்போதுதான், அரசியல் கட்சிகளால்தான் கோபம் தூண்டப்படுவதை உணர்ந்தேன். அதனால்தான் பாஜகவையும், அதன் அரசியலையும் எதிர்க்கிறேன்.

அரசியல் ஆதாயத்துக்காக, மக்களைக் காயப்படுத்தும் பாஜகவின் அரசியலை எதிர்க்கிறேன். அவர்கள் முசாபர் நகருக்குச் சென்று தீ மூட்டுவார்கள்.

 அவர்கள் குஜராத்துக்குச் சென்று தீ மூட்டுவார்கள். உத்தரப் பிரதேசத்திலும் காஷ்மீரிலும் அதையே செய்வார்கள். நாம் அந்தத் தீயில் சிக்கிவிடக் கூடாது.

இந்தியா ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். பாஜக மக்களைப் பிரிக்கிறது.
ஆனால், இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்."

@ராகுல் காந்தி !! 

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...