விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று விமர்சித்த இளையராஜா
https://tamil.news18.com/news/entertainment/music-director-ilayaraja-participated-in-the-ceremony-at-college-in-coimbatore-63695.html
விசில் அடிப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் விசில் அடிக்கலாம் .
மதுரையில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து வாய்ப்புகள் தேடியது மறந்து போச்சா ? அல்லது கம்யூனிஸ்ட் மேடைகளில் பாடி வயிற்றை கழுவியதும் மறந்துபோச்சா??
இசைஞானி இளையராஜா சமீபகாலமாக இவ்வாறு தலைகனம் பிடித்து பேசுவது அவர் மேல் வைத்திருக்கும் மறியாதையை குறைக்கிறது.
உயர உயர பறத்தாலும் ஊர் குருவி பருந்து ஆகுமா...?
பாசிச கும்பலுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜால்ரா தட்டுவது எந்தவகை ராகமோ..?
இசையால் அமைதியையும், அன்பையும் வளர்க்கவும், வன்முறை எண்ணத்தை தடுக்கவும் சக்தி உண்டு என்று அங்கலாய்க்கும் ராஜாவே மாணவர் விசில் அடித்து தங்கள் ஆதரவை தெரியப்படுத்த நினைக்கும் போது , பல ஆயிரம் ராகங்களோடு வாழ்ந்த உமக்கு அந்த பொறுமையும், அன்பும் எங்கே போய்விட்டது..??
விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று விமர்சித்த இளையராஜாகோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, தான் பேசும்போது விசில் அடித்த மாணவர்களை கடவுள் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் என்று விமர்சித்தார்.
கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது விசில் அடித்த மாணவர்களை கடவுள் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்ட்டுகள் என இளையராஜா கடிந்து கொண்டார்.கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இசைஞானியுடன் ஒரு இசை மாலை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளையராஜா கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக அவரை வரவேற்று மாணவர்கள் பாடல்களை பாடினர்.
மாணவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, 1974 ஆம் ஆண்டு மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற நிகழ்வு குறித்து பேசினார். அப்போது அரங்கில் இருந்த மாணவர்கள் விசில் அடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளையராஜா, கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் என மாணவர்களை கண்டித்தார்.
தொடர்ந்து, இசை குறித்து பேசிய இளையராஜா ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பைத்தியம் என்றும், தன்னை இசைப் பைத்தியம் என்றும் குறிப்பிட்டார்.
இசையை கற்றுக்கொண்டால் வன்முறைக்கு போக தோன்றாது எனக்கூறிய அவர், மேடையில் பாடிய மாணவர்களை அழைத்து “காற்றில் வரும் கீதமே” பாடலை ஒன்றாக பாடினார்.
தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், கவிஞர் கண்ணதாசனுக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறினார்.

Comments
Post a Comment