மீரட்டில் முஸ்லிம்கள் 42பேர் கொல்லப்பட்ட வழக்கில் 31 ஆண்டுகள் கழித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
1986 ஆம் ஆண்டு பாபர் மசூதி சீல் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் சமூகங்களிடையே பதட்டம் ஆரம்பித்தது. இந்நிலை இரு சமூகத்தின் தலைவர்களுடைய உணர்ச்சி தூண்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டு 1987 மார்ச்சில் கலவரமாக வெடித்தது.
ஜூன் மாதம் வரை தொடர்ந்த இக்கலவரத்தில் 390 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுவரை ஒருவர்கூட இக்கலவரக் குற்றத்தில் தண்டிக்கப்படவில்லை.
இக்கலவரத்தின்போது, மீரட் நகரிலுள்ள ஹாஷிம்புரா கிராமத்திலிருந்து குழந்தைகள், முதியவர்களை நீக்கிவிட்டு 65 முஸ்லிம் இளைஞர்களை உ.பி. சிறப்பு இராணுவப்படையினைச் சேர்ந்த சிப்பாய்கள் லாரிகளில் ஏற்றிச் சென்று சுட்டுக்கொன்று, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கால்வாயில் வீசி சென்றனர்.
1988 முதல் 2015 வரை நடந்த பல்வேறு விசாரணை மற்றும் இழுத்தடிப்புக்கு பிறகு குற்றம் சாட்டபட்டவர்கள் அணைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்தனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த மேல் முறையீட்டு விசாரணையின் இறுதியில், இன்று 2018 அக்டோபர் 31 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தாம் எனவும் அவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் 16 சிப்பாய்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நடந்து சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி, மேலும் 14 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, அதிகாரத்தின் அத்தனை கைகளையும் கொண்டு இல்லாமலாக்க முயற்சி செய்யப்பட்ட இந்தக் கொடூர கொலைக்கு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவில் ஒரு போலீஸ் படை நடத்திய மிக மோசமான கூட்டுப் படுகொலைதான் ஹாஷிம்புரா படுகொலைகள்.
ஆனால் சுட்டுத் தள்ளப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் தப்பிப் பிழைத்த நான்குபேர் இப்படுகொலைகளை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தனர்.
http://www.puthiyavidial.com/ஹாஷிம்புராஇரத்தத்தை-உறை/

இதனால் யாருக்கு லாபம்
ReplyDeleteஇப்படிப்பட்ட நீதி தேவையா? இந்த நீதி மறுக்கப்பட்ட உண்மை மறைக்கப்பட்ட மக்களின். உரிமை.
Very good
ReplyDelete