ஃபேஸ்புக்... இருண்ட முகம்!
‘‘அடிப்படையான இணைய வசதிகளைப் பற்றித் தெரியாத மக்களுக்கு, இணையம் மூலம் நடக்கும் பல ஆயிரம் டாலர்களுக்கான வர்த்தகம் பற்றியும் தெரியாது.
அத்தகைய மக்களுக்கு இணையத்தை அறிமுகப்படுத்துவதில் ஃபேஸ்புக் ஆர்வம் காட்டி வருகிறது. இணையச் சேவையை உலகம் முழுவதும் இலவசமாகக் கொடுப்பது அதிகச் செலவு பிடிக்கும் திட்டம்.
அதனால் இணையச் சேவை வழங்கி வரும் சில நிறுவனங்களுடன் இணைந்து குறிப்பிட்ட இணையச் சேவைகளை மட்டும் இலவசமாக வழங்குவது அனைவருக்கும் பலன் அளிக்கும். இதை எதிர்ப்பவர்கள் ஏற்கெனவே இணைய வசதி பெற்றவர்கள்தான்.
நாம் இணைய வசதி அற்றவர்களின் நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வாய்ப்புள்ள இணையதளமே உண்மையான இணையதளமாக இருக்க முடியும்” என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் சொல்லி இருக்கிறார்.
இதைப் படிக்கும்போது உலக மக்களுக்கு உன்னதமான சேவையை, எந்தவித லாப நஷ்டங்களும் பார்க்காமல், தங்கள் எண்ணங்களைச் சுதந்திரமாகச் சொல்ல பாதைகள் அமைத்துத் தரும் சேவை நிறுவனத்தை இவர்கள் நடத்தி வருவது போன்ற தோற்றம் தெரிகிறது.
ஆனால், அப்படித்தான் ஃபேஸ்புக் நிறுவனம் நடந்துகொள்கிறதா?
சுதந்திரமானதா ஃபேஸ்புக்?
இணைய வசதி இருப்பவர்கள் எல்லாம் தங்கள் பெயரில் ஃபேஸ்புக் தொடங்கிக்கொள்ளலாம். தங்களது எண்ணங்களை அதில் பதிவுசெய்யலாம். தங்களது நண்பர்களுடன் இதன்மூலமாகத் தொடர்ந்து தொடர்பில் இருக்கலாம். புதிய நண்பர்களைச் சேர்க்கலாம், நீக்கலாம் என்ற திறந்தவெளிக் கண்காட்சிபோல 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஃபேஸ்புக் தொடங்கப்பட்டது. இது கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்று கொண்டாடப்பட்டது.
எல்லாச் சுதந்திரத்தையும் கட்டுப்பாடாக பயன்படுத்து பவர்கள் குறைவுதான். இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஆபாசம், வன்முறை, தீவிரவாதம் போன்றவை இணைய தளங்களில் கோலோச்ச ஆரம்பித்தன. அதன்பிறகு, அவற்றுக்குக் கட்டுப்பாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதற்குச் சில சட்டங்களும், திட்டங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால், அதையும் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள், தங்களுக்கு எதிர் கருத்துக் கொண்டவர்களை நியாயமான காரணம் இல்லாமல் கட்டுப்படுத்தும் வேலைகளில் இறங்கினர். ஆக, இங்கும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க முடியும் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.
நாள்தோறும் பலரது ஃபேஸ்புக் பக்கங்கள் பல்வேறு காரணங்களால் முடக்கப்படுகின்றன. தனிமனிதர்கள், பிரபலம் அல்லாதவர்கள் வேறு ஒரு பெயரில் பக்கத்தை ஆரம்பித்துவிட்டு அதில் பிஸி ஆகிவிடுகிறார்கள்.ஆனால் பிரபலங்கள், நிறுவனங்கள், பத்திரிகைகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களது பக்கங்கள் முடக்கப்படும்போதுதான் அது வெளியில் தெரிய வருகிறது.
கழுத்து நெறிக்கப்படும் கருத்துரிமை?
மதரசாக்களை விமர்சித்து பதிவிட்ட கேரள பெண் பத்திரிகையாளர் வி.பி.ரஜீனாவின் பக்கம் முடக்கப்பட்டது. மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக கருத்துத் தெரிவித்த பிரபல மலையாள நடிகை அருந்ததியின் பக்கம் முடக்கப்பட்டது. ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுவர்தாஸ், அந்த மாநில மக்களின் குறைகளைக் கேட்பதற்காக ஒரு பக்கம் ஆரம்பித்தார்.
அந்த மாநில எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரகசியமாகப் புகார் அனுப்பி அந்தப் பக்கத்தை முடக்க வைத்தார்கள். பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களைப் பதிவுசெய்த மும்பை இளைஞர் தேவு சோடன்கர் கைது செய்யப்பட்டார். அவரது பக்கமும் முடக்கப்பட்டது.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விமர்சனம் செய்த புதுச்சேரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவி ஸ்ரீனிவாசனின் ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய இரண்டுமே முடக்கப்பட்டன.
பால் தாக்கரே இறந்தபோது பரபரப்பான கருத்துக்களைச் சொன்ன மும்பை பெண் ஷாகின் தாதா தாக்கப்பட்டார். அவரது பக்கம் முடக்கப்பட்டது. அவர் சொன்னதற்கு லைக் போட்ட பெண்ணும் கைதுசெய்யப்பட்டார். இப்போது ‘ஆனந்த விகடன்’ பக்கம் முடக்கப்பட்டு, அதற்கான முறையான காரணம் ஃபேஸ்புக் நிறுவனத்தால் சொல்லப்படாமல் மூன்று நாட்கள் கழித்துத் திருப்பித் தரப்பட்டு உள்ளது.
எதற்காக முடக்கப்படுகிறது, அதற்கான பரிகாரம் என்ன, எப்போது முடக்கம் நீக்கப்படும், திருப்பி அளிக்கப்பட்டது என்றால், அதற்கான காரணம் என்ன என்று எதையுமே சொல்லாமல் முடக்கமும் நீக்கமும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
சமூக வலைதளங்களில் எரிச்சலூட்டும், சிரமமான மற்றும் அபாயகரமான செய்திகளைப் பதிவுசெய்யும் நபர்களை காவல் துறையினர் கைதுசெய்ய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவு வழிவகை செய்து இருக்கிறது. அந்தப் பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. ‘இது கருத்துச் சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி’ என்று சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். இப்படிச் சொல்வதாலேயே எல்லாவற்றையும் எழுதிவிட முடியுமா? எழுத அனுமதித்துவிடுகிறார்களா? அப்படி முடியாது, முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மையாகவும் இருக்கிறது.
சேவை செய்கிறதா ஃபேஸ்புக்?
கோடிக்கணக்கான பயனர்கள் ஃபேஸ்புக்கில் தங்களுடைய கணக்கை உருவாக்கிச் செயல்படுகிறார்கள். பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். நீங்கள் போடும் பதிவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. அதற்கு காப்பிரைட் உரிமையாளரும் நீங்கள்தான். அந்தப் பதிவுகளுக்கு ஃபேஸ்புக், உரிமை கோருவதில்லை. இந்தப் பதிவுகள் உங்கள் பக்கத்தின் வருகையாளர்கள் அதிகம் இருக்கும்போது அந்தப் பக்கத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் விளம்பரங்களைப் பிரசுரிக்க அனுமதி கொடுக்கிறீர்கள். அந்த விளம்பரங்களுக்கு நாம் பொறுப்பு கிடையாது. அதன்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் உரிமை கோர முடியாது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானமே இந்த விளம்பரங்களை நம்பித்தான் உள்ளது.
ஒருவர் ஒரு கணக்குத்தான் வைத்திருக்க முடியும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட போலியான கணக்குகளை வைத்திருக்கக் கூடாது. நீங்கள் போடும் பதிவு ஆபாசமாகவோ, வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவோ, நாட்டின் சட்டத்துக்கு எதிராகவோ இருக்கக் கூடாது. சமூக ஒழுக்கத்துக்கு எதிராகவும் இருக்கக் கூடாது.
இதையெல்லாம் மீறி பதிவுகள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அப்படிப்பட்ட பதிவுகள் ஃபேஸ்புக்கில் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பிட்ட பக்கம் பற்றி புகார் வரும்போதுதான் அதில் உள்ள பதிவுகளை நிறுவனம் கண்காணிக்கத் தொடங்குகிறது. யார் புகார் சொல்கிறார்கள், எந்த உள்நோக்கத்துடன் புகார் சொல்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்காமல் யாராவது புகார் சொன்னால் போதும், உடனே பக்கத்தை முடக்கி விடுகிறார்கள். இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.
எது ஆட்சேபத்துக்கு உரியது?
பொதுமக்கள் பார்வையில் இணையதளத்தில் ஒரு பக்கத்தையோ, ஃபேஸ்புக் அல்லது அது போன்ற சமூக வலைதளத்தையோ நீக்குவதற்கு தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 ஏ - அதிகாரம் அளித்துள்ளது. அதைப் பயன்படுத்தி 2009-ல் தகவல் தொழில்நுட்பம் பொதுமக்களிடம் இருந்து தகவல்களைச் சேர்ப்பதற்குத் தடை செய்தவற்கான விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியது. அந்த விதிமுறைகள் 6-ன்படி ஆட்சேபம் தெரிவிக்கும் எவரும் கீழ்க்கண்ட காரணங்களைச் சொல்லலாம்.
இந்திய இறையாண்மை, பாதுகாப்பு, நட்பு நாடுகளுக்கான உறவு, பொது அமைதி, கடுமையான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் - ஆகியவை தொடர்பான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதைக் காட்டி பக்கத்தை முடக்கலாம். இந்தியச் சட்டத்துக்கு முரணாக ஏதாவது ஒரு பதிவு இருக்குமானால், தனி நபரோ நிறுவனமோ இதற்கென நியமிக்கப்பட்டு இருக்கும் அதிகாரியிடம் புகார் தெரிவித்து அவர்கள் அதனை ஆராய்ந்து, அந்தப் பக்கத்தை நீக்க ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் பரிந்துரைப்பார்கள்.
அதன் அடிப்படையில் அந்தப் பதிவு நீக்கப்படும்.
மேற்படி சொன்ன வழிமுறைகள் தவிர, வேறு எந்த வழிமுறைகளும் ஒரு பக்கத்தை மூன்றாம் நபர் நீக்க முடியாது.
-IRA

Comments
Post a Comment