Skip to main content

பஞ்சமி நிலம் பற்றி ஓர் பார்வை (சட்டம் அறிந்துகொள்வோம் )

பஞ்சமி நிலங்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 



1891 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. ஹெச். ஏ. ட்ரெமென் என்ற ஆங்கிலேய அதிகாரி பிரிட்டிஷ் அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பரிதாப நிலையை சுட்டிக்காட்டிய அவர், நிலங்களை அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கவும் சிபாரிசு செய்தார் . அவரது அறிக்கை கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

அந்த அறிக்கையின்படி தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலைமையை முன்னேற்ற விவசாயம் செய்ய அவர்களுக்கு நிலங்களை கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி 30.9.1892 ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி தாழ்த்தப்பட்ட மக்களிடம் விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிலங்களுக்கான விதிகளை வருவாய் ஆணையம் வெளியிட்டது. அவ்விதிகளில் சில

1. 10 ஆண்டுகளுக்குள் நிலத்தை யாரிடமும் விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது.

2. 10 ஆண்டுகளுக்கு பின் நிலத்தை வேறோரு தாழ்த்தப்பட்ட நபரிடம் தான் விற்கவோ அடமானம் செய்யவோ வேண்டும்.

3. இவ்விதிமுறைகளை கூறினால் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.

நில ஒப்படை விதிகளை மீறி நிலமாற்றம் செய்தால் அது சட்டப்படி செல்லாது. அப்படி விதி மீறப்பட்டால் வருவாய் வாரியமே அந்நிலங்களை திருப்பி எடுத்துக் கொள்வதற்கு அவ்விதிகளில் இடமிருந்தது. இதையும் மீறி அந்நிலங்களை ஆதிக்க சக்திகளும், கட்டுமான நிறுவனங்களும் அவர்களிடமிருந்து பலவந்தமாகவோ அல்லது பணம் கொடுத்தோ பறித்துக் கொண்டனர். பஞ்சமி நிலங்கள் பறிக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் இயக்கங்கள் தொடங்கப்பட்ட பிறகு விழித்துக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அவரவர்கள் பகுதிகளிலிருந்த பஞ்சமி நிலப் பரிமாற்றங்களை ரத்து செய்து நிலங்களை மீட்க முயன்றனர். அம்முயற்சிகளை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள்  தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதியரசர் பஞ்சமி நிலங்கள் பற்றிய வரலாற்றை குறிப்பிட்டதுடன் நிலப் பரிமாற்றம் ஒப்படைப்பு விதிகளுக்கு புறம்பாக இருந்ததனால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவற்றை ரத்து செய்ய முழு உரிமை உண்டு என்று தீர்ப்பு கூறினார்.

பார்க்க :

வி. ஜி. பி பிரேம் நகர் மின்வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பலர் Vs தமிழ்நாடு அரசு அதன் வருவாய்த்துறை அரசு செயலாளர் மூலம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை மற்றும் பலர், W. P. NO - 17467/1996, உடன் மற்ற தொகுப்பு வழக்குகள், 7.11.2008

மேற்படி தீர்ப்பினை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீடும் இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் தள்ளுபடி செய்யப்பட்டது.

(2010-6-MLJ-337-DB)

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...