Skip to main content

பிஜேபி-யிடம் நாமா ஒரு கேள்வி கேட்டா அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதில் சொல்வார்கள் பாருங்க அது இப்ப இல்ல எப்போதும் புரியாது

மோடியின் தூக்கத்தை கெடுத்த ரபேல்!!



இந்த ரபேல் பிரச்சனை மோடியின் தூக்கத்தை கண்டிப்பாக கெடுத்து இருக்கும்..

 மிகப்பெரிய கோல்மால் நடந்து இருக்கிறது..

வெளியே சொல்ல முடியாத கோல்மால் நடந்து இருக்கிறது..

அதை சமாளிக்க தெரியாமல் (முடியாமல்) ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து வாய்க்கு வந்தத பேசிட்டு இருக்காங்க..

இதுவரை காங்கிரஸ் கேட்ட எந்த கேள்விக்கும் மோடியிடம் இருந்து பதில் வரவில்லை..

அதற்க்கு பதிலாக ராகுல் ஒரு குழந்தை, ராணுவ ரகசியம், ரபேல் நல்ல விமானம், கன்னி ராசியில் கையெழுத்தானது, டஸ்சால்ட்-ரிலையன்ஸ் மாமன்- மச்சான், மறுபடி ராணுவ ரகசியம், சீனா-பாகிஸ்தான் தலையீடு, தேசபக்தி, ராகுல் ஒரு பப்பு, ராகுல் விவரம் தெரியாமல் பேசுகிறார், அவர் ஒரு குழந்தை, காங்கிரஸ் ஆட்சி 50 ஆண்டு ஊழல்.... இப்படி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்.. வழக்கம் போல சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்கிறார்கள் மோடி & கோ.. எவ்வளவு நாளைக்கு தான் இப்படி பதில் சொல்லிட்டு அலைவாங்கன்னு தெரியல..

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. ராகுல் தெளிவாக இருக்கிறார்.. இந்த பிரச்சனையை விடப்போறதில்லை.. கண்டிப்பாக காங்கிரஸ்'சிடம் இந்த ஊழல் பற்றிய மிகப்பெரிய ஆதாரம் இருக்கவேண்டும்.. அதனால் தான் இவ்வளவு வெளிப்படையாக "மோடி ஒரு திருடன்" என்பதை ராகுலால் பேச முடிக்கிறது.. ஒரு முறை இல்லை.. ஆயிரம் முறை சொல்லி இருப்பார்.. ஒரு வேளை மோடி திருட்டுத்தனம் செய்யவில்லை என்றால் இந்நேரம் ராகுல் மீது ஏறி விளையாடி இருப்பார் மோடி.. ராகுல் மீது அவமதிப்பு வழக்கு போட்டு ஜெயிலில் கூட தள்ளி இருக்கமுடியும்.. மோடியின் அமைதியே அவர் ஒரு திருடன் என்பதற்கு சான்று..

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. ரபேல் மோடியின் அரசியல் அத்தியாயத்தை முடித்து வைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.. தேர்தல் வரை காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கும்.. இப்போதே நிறைய ஆதாரம் இருந்தாலும்.. அதை வெளியிட வாய்பிருக்காது.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியிட அதிக வாய்ப்பிருக்கிறது.. அதுதான் தேர்தல் அரசியலுக்கு உதவும்..

பணமதிப்பிழப்பு தான் இந்தியாவில் நடந்த மாபெரும் ஊழல்.. ஆனால் அந்த ஊழலை பற்றிய விவரங்களை மக்களிடம் சரியாக கொண்டுபோய் சேர்க்கவில்லை காங்கிரஸ்.. ஆனால் ரபேல் ஊழல் பற்றிய விவரங்களை கடைசி இந்தியன் வரைக்கும் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்புவோம்..

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...