பெண்களுக்கான விழிப்புணர்வு பதிவு
"காவலன்" செயலி குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காவலன் (Kavalan) என்பது கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிரக்கம் செய்துகொள்ளக்கூடிய செயலி ஆகும்.
செயலியின் லிங்க் இதோ :- https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kavalansos
இந்த செயலியை உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் ஏதேனும் அவசர தேவைக்கு, ஆபத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், உடனடி காவல் உதவியை பெறமுடியும்.
உங்கள் அலைபேசி எண், முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அவசர தேவைக்கு நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய இரண்டு பேருடைய எண்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இதிலுள்ள சிவப்பு குறியீட்டை அழுத்தினால் சென்னையில் உள்ள பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு செல்லும், உடன் அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
உங்களுடைய இருப்பிடம் ஜிபிஎஸ் மூலமாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிந்துவிடும்..
உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லி குறைந்த நேரத்தில் காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்.
பெண்கள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள செயலியாகும்.
குற்றம் நடக்கக்கூடும் என்று உணர்ந்தாலே உடனடியாக இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உதவி பெறலாம் .
இதில் ஷேக் ட்ரிக்கர் எனும் வசதி உள்ளது அதை ஆன் செய்து விட்டால்..
நீங்கள் அழைக்கவே தேவையில்லை...
மூன்று முறை அலைபேசியை வேகமாக அசைத்தாலே அழைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும்..
உடனே பதிவிறக்கம் செய்து இந்த காவலன் செயலியை பயன்படுத்துங்கள்!!
அனைவருக்கும் இந்த காவல் உதவி வாய்ப்பை தெரியப்படுத்தவும்..
- IRA

Comments
Post a Comment