Skip to main content

இன்று இந்தியா முழுவதும் Me too என்ற ஹேஸ்டேக் பற்றி பரவலாக பேசப்படுகிறது...

இன்று இந்தியா முழுவதும் Me too என்ற ஹேஸ்டேக் பற்றி பரவலாக பேசப்படுகிறது...

கஷ்மீரில் இந்திய ராணுவம் செய்துவரும் மனித உரிமை மீறல்கள் அப்பாவிப் பெண்களை சிறுமிகளை குழந்தைகளை கற்பழித்து போலி என்கவுன்டரில் சுட்டு படுகொலை செய்வதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்..

ஆனால் இது அனைத்தும் ஏற்க மறுக்கும் சில குறுகிய மனம் கொண்ட மக்களுக்காக இந்த பதிவு... இந்திய ராணுவம் இன்று காஷ்மீரில் என்ன செய்து வருகிறதோ அதே போல் கடந்த 2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்திலும் செய்தது…

15 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 15ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 12 பெண்கள் இந்திய ராணுவ படையின் தலைமையகமான கங்கலா கோட்டைக்கு முன்பு #நிர்வானமாக நின்று இந்திய ராணுவமே எங்களையும் கற்பழித்து கொன்றுவிடு என்று ரத்தத்தால் எழுதப்பட்ட வாக்கியங்களுடன் நின்றார்கள்…

இதற்கான காரணம் தங்கஜம் மனோரம்மா இன்னும் 32 வயது பெண்மணியை புரட்சிப் படையை சேர்ந்தவர் என்று இந்திய ராணுவ படை வீடு புகுந்து எந்த ஆதாரமும் விசாரணையும் இன்றி தூக்கிச் சென்றது….

இரண்டு நாட்களுக்கு பிறகு அவருடைய சடலம் தெருவில் கொடூரமான நிலையில் மக்கள் கண்டனர்…

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அப்பெண்மணி பல முறை கற்பழிக்கப்பட்டு பிறகு மறைவான இடங்களில் 16 தோட்டாக்கள் பாய்ச்சி கத்தியால் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்கள் என்று தெரியவந்தது…

இதை அறிந்து கொண்ட மக்களை வேதனையிலும் கோபத்திலும் பொங்கினார்கள்… 

1977 ஆம் ஆண்டு மெரா கைபி ( Meira kaibi ) எனும் புரட்சி படை உருவாக்கப்பட்டது… இது போன்ற அப்பாவி பெண்கள் இரவு நேரங்களில் கற்ப்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதை தடுப்பதற்காக பெண்கள் போராளிகள் போல் இரவு நேரங்களில் தீ பந்தத்துடன் உலா வருவார்கள்…

இந்த அமைப்பை சார்ந்த 12 பெண்கள் யாருமே எதிர் பார்க்காத வகையில் போராடினார்கள்… போராட்டத்தின் தாக்கம் இந்திய இராணூவாத்தை அதனுடைய தலமையகத்தை விட்டு வெளியேற செய்தது…

 பிறகு அப்பெண்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்கள்…

உச்சநீதிமன்றம் இந்திய இராணுவத்தின் இச்செயலை கண்டித்தது மட்டுமல்லாமல் Armed forces special power act சட்டத்தை தவறாக பயன்படுத்தி 2000 க்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்து இந்திய இராணுவத்திடம் அதற்கான சரியான காரணம் மற்றும் வழக்கு விவரங்களையும் கேட்டது….

என்ன பயன் தங்கஜம் மனோரம்மாவை கொன்ற எந்த குற்றவாளிகளுக்கும் இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை சுதந்திரமாக தான் உலா வருகிறார்கள்…

இது போன்ற சட்டம் அமலில் உள்ள இடங்களில் இராணுவ வீரர்களை #மத்திய_அரசினுடைய பாதுகாப்பு துறை அல்லது உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி விசாரிக்கவோ கைது செய்யவோ அனுமதியில்லை…

இது போன்ற வழக்குகளில் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டது இல்லை தண்டிக்கப்பட்டதும் இல்லை….

இது போன்ற இடங்களில் பெண்களை சிறுமிகளை ஈவு இரக்கமின்றி கற்ப்பழித்த கொலை செய்து வீசுவது ஒரு சராசரி நடவடிக்கையாகவே உள்ளது…

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறித்து பேசும் இந்த தருணத்தில் அன்று இந்திய இராணுவம் #மணிப்பூரில் பெண்களுக்கு செய்த கொடுமையை இன்று கஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மறக்கவும் மன்னிக்கவும் இயலுமா…??

மதிப்பிற்குரிய இந்திய இராணுவத்தின் தியாகங்கள், செயல்கள் அனைத்தும் நிச்சயமாக போற்றப்பட வேண்டியவைகள் தான்… அதற்காக அவர்கள் செய்யும் மனித உரிமை மீறல்கள் செயலை பொறுத்து கொண்டு கண்டும் காணாமல் இருப்பது எவ்விதத்தில் நியாயம்…?? 

அப்பொழுது ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் கொண்ட நாட்டிற்கும்
இராணுவத்தின் கீழ் உள்ள ஆட்சிக்கும் ( martial law ) என்ன வேறுபாடு உள்ளது..??

ஜெய்ஹிந்த்

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...