Skip to main content

Online food delivery சேவையை பற்றிய ஒரு கட்டுரை

இணையத்தளம் மற்றும் Mobile Application-கள் மூலம் பலதரப்பட்ட சேவைகள் இக்காலத்தில் கிடைத்து வருகிறது. 




அதில், சமீபத்திய வரவானவை Online Food Delivery  சேவைகள். 

நாம் இருக்கும் இடத்திற்கு கேட்கும் உணவுகளை குறுகிய நேரத்தில் எடுத்து வந்து சேர்க்கின்றனர்.

இந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக அளிக்க தனியார் நிறுவனங்கள் Delivery Boys(விநியோகப் பணியாளர்கள்)  என்ற பெயரில் இளைஞர்களை பணியில் அமர்த்தி செயல்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்களின் தேவைகளை Mobile Application மூலம் ஏற்கும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் விநியோகப் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் Delivery செய்யப்படும் என வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.



அதிக விநியோகம் செய்தால் கூடுதல் ஊக்கத்தொகை தரப்படுவதால், விநியோக பணியாளர்கள் சாலை விதிகளை மதிக்க மறுக்கின்றனர். அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக விநியோகப் பணியாளர்கள் பின்வரும் செயல்களில் ஈடுபடுவதை தினமும் காண முடிகிறது.
விரைவாக Delivery  செய்ய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது.
சாலையின் எதிர்திசையில் அதிவேகமாக பயணிப்பது. (சமீபத்தில் வேளச்சேரி மேம்பாலத்தில் தவறான திசையில் பயணிப்பதை காண முடிந்தது)
செல்போன்-ஐ பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுவது
ஹெல்மெட் அணியாமல் ஹெட்போன் உடன் வாகனம் ஓட்டுவது
சிக்னல், யூ டர்ன் மற்றும் மற்ற சாலை விதிகளை புறக்கணிப்பது
மேற்கூறிய சாலைசட்ட விதிமீறல்கள் தினம் நூற்றுக்கணக்கில் நடந்துவருவதை சென்னை மாநகரில் தொடர்ந்து காணமுடிகிறது. குறிப்பாக, மென்பொருள் நிறுவனங்கள், கல்லூரிகள் அதிகம் உள்ள OMR மற்றும் ECR நெடுஞ்சாலைகளில் இது போன்ற செயல்களை அதிகமாக காண முடிகிறது. இச்சாலைகளில் விபத்துகளும் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன.

எடுத்துகாட்டாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை துரைப்பாக்கம் பகுதியில் எதிர் திசையில் வந்த Swiggy நிறுவன விநியோகப் பணியாளர்,  நண்பர் ஒருவர் மீதி மோதி விபத்துக்குள்ளாக நேரிட்டது. அந்த இடத்தில் வயதான நபரோ அல்ல பெண்களோ பயணிக்க நேரிட்டிருந்தால் அது பெரிய விபத்தாகியிருக்ககூடும். இது போன்ற சாலை விதிமீறல்கள் தினம் நடப்பதால், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. அது தவிர, விநியோக பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவற்றை பொதுமக்கள் மற்றும் விநியோகப் பணியாளர்கள் நலன் கருதி உடனடியாக தடுத்திட ஆவன செய்ய ஏதுவாக தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.



நோய்களை விட சாலை விபத்துகளே தமிழ்நாட்டில் 2018இல் (ஜூலை வரை. 7256 பலி) அதிக உயிர்களை காவு வாங்கிருக்கிறது என்பதயும் குறிப்பிட விரும்புகிறேன்.இதை பரிசீலித்து Swiggy, Uber Eats, Zomato மற்றும் இத்துறையில் இயங்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை சார்பில் அளிக்க வழிவகை செய்யுமாறு வேண்டுகிறேன். பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன் காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகிறோம். .

- சமூக - புலன் விசாரணை ( IRA )

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...