மதச்சார்பின்மையின் முன்னோடி மாமன்னர் வீரன் திப்பு சுல்தான் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்று தகவல்கள்.!
மைசூரை ஆண்ட மாவீரன் திப்பு சுல்தான் இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர்.
இந்திய விடுதலை போரில் இவரின் பங்களிப்பு யாராலும் மறைக்க இயலாதது.
திப்பு சுல்தான் குறித்து 'இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் உருவாக்கம்' என்று 1930 'யங் இந்தியா' இதழில் மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான் என்று ஜவகர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார்.
1790-ம் ஆண்டு பிரிட்டிஸ், பிரன்ச்சு அரசுகளுக்கு எதிராக உலகின் முதல் ராக்கெட் ஏவுகணையை ஏவினார் திப்பு.
இந்துக்களின் புகழ்பெற்ற சாரதாதேவி கோவிலை மறுநிர்ணயம் செய்ய முழு பொருளுதவியையும் வழங்கினார் திப்பு சுல்தான்.
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலை போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, கோபால் நாயக்கர் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு உந்து சக்தியாய் விளங்கினார் திப்பு.
தான் திப்புவை கண்டு அஞ்சுவதாக 1798-ம் ஆண்டு தமது கும்பினி தலைமைக்கு கடிதம் எழுதினான் கவர்னர் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன்முதலில் ஒலித்தன.
பாளையக்காரர்கள், ஆர்காடு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவைரும் ஆங்கிலேயர்கள் பின்னால் நிற்க தன்னந்தனியாக எதிரிகளை எதிர்கொண்டார் திப்பு.
எந்த சாதி மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி உழுபவருக்கே நிலம் சொந்தம் என்று திப்பு பிரகடனம் செய்தார்.
சென்னை மாகாணத்தை போல் அல்லாமல் மைசூர் அரசில் தலித் சமுதாயத்தினருக்கு பல இடங்களில் நிலஉடைமையை வழங்கினார் திப்பு.
ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புருத்த மாட்டோம் என்று வருவாய் ஊழியர்களிடம் உறுதிமொழி வாங்கினார் திப்பு.
1792 போருக்கு பின் வேலூரிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசில் குடியேரினர்.
கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை கட்டுவதற்காக 1798-ல் திப்புசுல்தான் அடிக்கல் நாட்டினார்.
இந்துஸ்தானம் முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை ஆகியவற்றை அமைக்கவும் திப்பு திட்டம் வகுத்திருந்தார்.
மது விற்பனையை முற்றிலும் ஒழித்து மதுவிலக்கை அமல்படுத்தினார். கஞ்சா விற்பனையை தடை செய்தார்.
எல்லா சமுதாய மக்களின் ஆலையங்களுக்கும் மானியம் வழங்கியும் அதனை பராமரித்தும் வந்தார்.
அநாதை இந்து சிறுமிகளை கோவிலுக்கு விற்பனை செய்யும் தேவதாசி முறையையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு.
எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்ககூடாது என்று ஆணையிட்டார் திப்பு.
அப்பாவிகள் மீது போர்தொடுக்க தடைவிதித்தார். பெண்களை கவுரவமாக நடத்தவும் அவரவர் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கவும் தனது இராணுவத்திற்கு எழுத்துப்பூர்வ கட்டளையிட்டார்.
கோவில் மணி ஓசைக்கும் பள்ளிவாசலின் பாங்கு அழைப்பிற்கும் சம மரியாதை தந்தார் திப்பு.
நெப்போலியனை வீழ்த்திய ஆர்த்தர் வெல்லெஸ்லி கூட திப்புவின் முன் நிற்கமுடியாமல் போனது வரலாறு.
தன்னை தானே மன்னன் திப்பு என்று அழைப்பதை விட "சிட்டிசன் திப்பு" என்று பெருமிதம் பொங்க அழைத்துக்கொள்வார்.
தனது மகன் ஃபதே ஹைதர் அலி அனுமதியின்றி வேறொருவர் தோட்டத்தில் காய் பறித்தமைக்காக தண்டனை வழங்கினார்.
நூற்றாண்டு குள்ளநரியாக வாழ்வதை விட ஒருநாள் சிங்கமாக வாழ்வதுமேல் என்று அடிக்கடி கூறிக்கொள்வார்.
முஸ்லீம் அல்லாத எந்த மக்களையம் மதம் மாறும்படி திப்பு ஒருபோதும் நிர்பந்தித்ததில்லை.
திருக்குர்ஆனின் அத்தனை போதனைகளையும் தன் வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்.
ஆட்டு மந்தைபோல் 200 ஆண்டுகள் வாழ்வதை விட இரண்டு நாட்கள் புலியாக வாழ்ந்து மடிவது சிறந்தது என கருதி பரங்கிய படையை எதிர்கொண்டார்.
விடுதலை போரில் சரணடைய மறுத்து வீரத்துடன் போரிட்டு தன்னுடன் மாண்ட 11,000 வீரர்களுள் ஒரு வீரனாய் உயிர்நீத்தார் திப்பு சுல்தான்.
- IRA

அருமை
ReplyDelete