49P என்கிற சட்டப்பிரிவு கூறுவது இது தான்:-
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் 18 வயதை கடந்துவிட்டால் வாக்களிக்கும் உரிமையை பெற்றுவிடுவார்கள்.
இதற்காக அவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டால் இந்தியாவில் அவர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் எந்த தேர்தலிலும் வாக்களிக்கும் உரிமை உண்டு.
அந்த வகையில் எந்த ஒருவரும் தனது ஓட்டை மட்டுமே போட வேண்டும்.
யாராவது கள்ள ஓட்டாக நம் ஓட்டை போட்டுச் சென்றுவிட்டார் அதற்கு 49P தீர்வாகிறது.
இந்த வகையில் நமது ஓட்டை ஒருவர் போட்டுச் சென்றுவிட்டார், உண்மையில் அந்த ஓட்டுக்கு உரியவர் நாம் தான் என்கிற ஆதாரத்தை நாம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
இதனை அவர் ஏற்கும் பட்சத்தில் நமது ஓட்டை வேறு யாரும் போட்டுச் சென்று இருந்தாலும் கூட நாமும் ஓட்டுப்போட முடியும்.
ஆனால் நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டோம்.
மாறாக நமக்கு வாக்குச் சீட்டு தருவார்கள்.
அதில் நாம் நமக்கு பிடித்த நபரின் பெயருக்கு அருகே பெருக்கல் குறி (X) இட்டு அதனை மடித்து தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.
இந்த வாக்கை தபால் ஓட்டுடன் சேர்த்து வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணுவார்கள்.
அதாவது கள்ள நோட்டு போடப்பட்டால் நமது வாக்குரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்று நாம் கவலைப்பட வேண்டியது இல்லை.
மாறாக 49P பிரிவை பயன்படுத்தி நாம் நம் ஓட்டை போட்டுவிட்டு வரலாம் என்பதே இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.
49 P என்ற ஒரு சட்ட விதியை ஒரு திரைப்படம் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய அளவில் நமது அறியாமை உள்ளது என்பதையும். இதற்கு முன்பு எவ்வளவோ தேர்தலில் வாக்காளர்களின் ஓட்டுக்கள் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகத்திற்கும் இப்படி ஒரு சட்ட விதிமுறை இருப்பதும் தெரியவில்லையா...?
வாக்குசாவடி மையத்தில் உள்ள வாக்குசாவடி கண்காணிப்பு அலுவலர்களுக்கு இதை பற்றி தேர்தல் ஆணையம் தகுந்த ஆலோசனை வழங்கவில்லையா....?
தேர்தல் ஆணையம் ஏன் தாமாக முன்வந்து இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இதற்கு முன் கள்ள ஓட்டால் தங்கள் ஓட்டை இழந்தவர்களுக்கு இந்த விதியை பயன்படுத்தி அவர்களின் ஓட்டை திரும்ப அளிக்காமல் இருந்ததற்கு ஏதாவது காரணம் இருக்குமா....?

Comments
Post a Comment