Skip to main content

பட்டா பற்றிய தகவல்

உங்களிடம் பட்டா இல்லையா?
-----------------------------------------------


சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறீர்கள். முறையாகப் பத்திரப் பதிவு செய்து ஆவணங்களைப் பத்திரமாக வைத்துக்கொள்கிறீர்கள். அந்த வீடு உங்களுக்கு சொந்தமாகிவிட்டது என்றுதானே நினைக்கிறீர்கள். அதான் இல்லை.

நீங்கள் வாங்கிய வீட்டுக்கான பட்டாவையும் உங்கள் பெயரில் மாற்றினால்தான் அந்த வீடு உங்களுக்கு சொந்தமாகும். அடுக்குமாடி வீடு என்பதால், உட்பிரிவு பட்டாதான் கிடைக்கும். ஒரு வேளை பட்டா வாங்காமல், பத்திரப்பதிவு ஆவணத்தோடு விட்டுவிட்டால் சொத்து என்னவாகும்?

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டையோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியையோ வாங்கி, பத்திரப்பதிவு செய்துவிட்டால் சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று எப்போதும் நினைக்கக் கூடாது. அப்படி வாங்கிய சொத்துக்கு பட்டாவும் வாங்க வேண்டும். ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியிருந்தாலோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியிருந்தாலோ அதற்கு உட்பிரிவு பட்டா வாங்குவது மிகவும் அவசியம். ஏனென்றால், நாம் வீடு வாங்குவதற்கு முன்போ அல்லது மனையில் ஒரு பகுதியை வாங்குவதற்கு முன்போ, அந்த மனை இன்னொருவருக்குச் சொந்தமாக இருந்திருக்கும். அந்த மனைக்குரிய பட்டா அவரிடமே இருக்கும். ஒரு வேளை உட்பிரிவு பட்டாவை வாங்காமல் இருந்துவிட்டால், பிற்காலத்தில் சொத்து சம்பந்தமாக வில்லங்கம் வரலாம்.

வாங்கப்படும் வீடு அல்லது மனையை பத்திரப்பதிவு செய்வதுக்கொள்வதோடு பத்திரப்பதிவு பணி முடிந்துவிடுகிறது. ஆனால், வீடு அல்லது மனை அமைந்துள்ள நிலங்களை வகைப்படுத்தி, அது எந்த வகையான நிலம் என்பதை ஆவணப்படுத்துவது வருவாய்த் துறையின் வேலை. இதன் அடிப்படையில் நிலங்களின் உரிமையாளர்களுக்கு அரசு பட்டாவையும் வழங்கியிருக்கும். வருவாய்த் துறை அளித்த அந்தப் பட்டா ஒருவரிடம் இருக்கும்போது அந்த மனை அவருக்குரியதாகவே இருக்கும். கிரயப்பத்திரம் இருந்தாலும், பட்டாதான் செல்லுபடியாகும். அடுக்குமாடி வீடு எனும்போது அந்த மனை பில்டர் பெயரிலேயே இருக்கும். வீடு வாங்கிய ஒவ்வொருவரும் உட்பிரிவு பட்டா வாங்காமல் இருந்தால், தன்னுடைய பட்டா மூலம் எதிர்காலத்தில் பட்டா வைத்துள்ளவர் உரிமை கோரலாம். அந்தப் பட்டாவைக் காட்டி இன்னொருவருக்கு சொத்தை விற்கவும்கூட செய்யலாம். அதனால் சிக்கல்கள் ஏற்படலாம்.

வருவாய்த் துறையின் ஆவணப்படி உங்கள் அடுக்குமாடி வீடு அமைந்துள்ள குறிப்பிட்ட இடத்துக்கு உட்பிரிவு பட்டா இல்லை என்றால் சிக்கல் கண்டிப்பாக எழலாம். உட்பிரிவு பட்டா பெறாமல் இருக்கும்பட்சத்தில் சொத்தை விற்றவருக்கு அனுகூலமாகிவிடலாம்.

அதெல்லாம் சரி, அடுக்குமாடிக்கோ வாங்கிய மனையின் ஒரு பகுதிக்கோ உட்பட்டா எப்படி வழங்குவார்கள்? நீங்கள் உட்பிரிவு பட்டா கோரி விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியவர்கள் உட்பிரிவு பட்டா கேட்டு விண்ணப்பித்தாலோ, சம்பந்தப்பட்ட அந்தச் சொத்து பிரிக்கப்பட்டு, மனையை உட்பிரிவு செய்து வருவாய்த் துறை பட்டா வழங்குவார்கள். உதாரணத்துக்கு உங்கள் மனையின் சர்வே எண் 50/1 என்று வைத்துக்கொள்வோம். 5 அடுக்குமாடி உரிமையாளர்கள் உட்பிரிவு பட்டா கேட்டு விண்ணப்பித்தால் 50/1ஏ, 50/1பி, 50/1சி… என வரிசைப்படுத்தி உட்பிரிவு பட்டா வழங்குவார்கள். ஒரு மனையின் ஒரு பிரிவை வாங்கியிருந்தால் மனை இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இதேபோலவே உட்பிரிவு பட்டா வழங்குவார்கள்.

மேலும் குறிப்பிட்ட அந்தச் சொத்தின் வரைப்படத்தில் நமக்குரிய பகுதியைக் குறிப்பிட்டு வருவாய்த்துறை ஆவணப்படுத்தி வைப்பார்கள். பட்டாவும் கிரயப்பத்திரமும் உங்களிடம் இருந்தால், அது அசைக்க முடியாத சொத்து ஆவணமாகிவிடும். சொத்தின் பழைய உரிமையாளர் எக்காரணம் கொண்டும் சொத்துக்கு உரிமைக் கொண்டாட முடியாத நிலை உருவாகிவிடும்.

இதுவரை அடுக்குமாடி வீட்டையோ அல்லது மனையின் ஒரு பகுதியையோ வாங்கி, பத்திரப் பதிவு செய்து பட்டா பெறாமல் இருந்தால், இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே வருவாய்த் துறை அலுவலங்களில் பட்டா கேட்டு விண்ணப்பியுங்கள்.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...