"லால்பேட்டை முழுவதும் சுற்றித் திரியும் சொறி | வெறி நாய்கள் - அசம்பாவிதங்கள் நடக்கும் முன் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லால்பேட்டையில் சில மாதங்களாக வெறி நாய்கள், சொறி நாய்கள் தொல்லை பெரும் பிரச்சினையாக, பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.
லால்பேட்டை நகர் மக்கள் தொகை பெருக்கத்திலும், நகரின் எல்லை விரிவாக்க வளர்ச்சியிலும் உச்சம் அடைந்து வருகிறது.
அதே நேரம் வெறி நாய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இதனால் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும், தெருக்களில் தளர் நடை போடும் முதியவர்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது பேரூராட்சி..
தெருவில் விடப்படும் நாய்கள் குட்டி போட்டு பல மடங்காக பெருகி வருகிறது.
அவை முறையாக பராமரிக்கப்படாததால் கிருமிகள் தாக்கி சொறி பிடித்து, நாக்கில் எச்சில் வடிந்து சொட்ட சொட்ட, பொதுமக்களை கடித்துக் குதற, தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து பொதுமக்களை காக்கும் நல் எண்ணத்தோடு பேரூராட்சி தலைவர் முன்வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு..
தெருக்களில், மூர்க்கமாக அலையும் சொறி நாய்களின் பயத்தால் இரவில் மக்கள் நடமாட அச்சம் கொண்டு வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலையை காண முடிகிறது.
இந்த வெறி நாய்கள் ஊளையிட்டுக் கொண்டு சத்தம் போடுவதால் வீடுகளில் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
இரவில் கூட்டம் கூட்டமாக அலைகின்றன.
என்று லால்பேட்டை பகுதி பொது மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
பல நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை துரத்திக் செல்வதால் விபத்துகள் நேரிடவும் வாய்ப்பாக இருக்கிறது.
- IRA

Comments
Post a Comment