Skip to main content

லிபரான் கமிஷன் முன்பு நேரில் பார்த்த பத்திரிகையாளர் கொடுத்த வாக்குமூலம்

ராமர் கோயிலுக்காக 1992-ல் செய்ததுபோல் மீண்டும் செய்ய வேண்டி வரும் – ஆர்எஸ்எஸ்

https://tamil.news18.com/news/national/will-launch-1992-like-agitation-for-ram-mandir-if-necessary-says-rss-66203.html

ஆர்.ஸ்.ஸ் என்பது இந்தியவினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கம்..



இவர்கள் என்ன பேசினாலும் இதை விட மோசமாக பேசினாலும் நீதிமன்றங்கள் வேடிக்கை மட்டும் தான் பார்க்கும்..

எந்த விதமான விசாரணையும் இவர்களுக்கு கிடையாது.

அதற்கு முன் உதாரணம் நம் கண் முன்னே சமீபத்தில் நடந்த சம்பவம் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் சம்பவங்கள்.

இந்த நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா?

நீதித்துறை என்று ஒன்று இருக்கிறதா?

கலவரம் செய்வோம் என்று பகிரங்க மிரட்டல் விடும் RSS பயங்கரவாத இயக்கத்தை தடை செய்யாமல் இருப்பது ஏன்? என்பது சாமானிய மக்களில் கேள்வியாக இருக்கிறது..

1992 - ல் செய்தது போல செய்வோம் என்று ஆர்ஸ்ஸ் சொல்கிறதே அப்படி  என்னதான் செய்தது என்ற கேள்விக்கு விடை இதோ..,

லிபரான் கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்த பத்திரிகையாளர்.



பாபர்மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி?

நேரில் படம் பிடித்தவர் கொடுத்த  ( வாக்குமூலம் ) தகவல்கள்..

டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நடைபெறும் ஒரு நாள் முன்பாக, இந்து தன்னார்வலர்களுடன் இருந்த புகைப்பட கலைஞர் ப்ரவீன் ஜெயின் தனது புகைப்படங்களையும், அன்று நடந்த நிகழ்வுகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி பனி மாலைப் பொழுதில் அயோத்தியா சென்றடைந்தேன்.



பாபர் மசூதி பகுதியில் ஒன்று சேருவதாக எதிர்பார்க்கப்பட்ட இந்து தன்னார்வலர்கள் மற்றும் இந்துத்துவா தலைவர்களை பயனீர் செய்தித்தாளுக்காக புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்டிருந்தேன்.

ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊழியர்கள் அங்கு ஏற்கனவே கூடியிருந்தனர்.



 ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துக்களின் கருத்தியல் ஆதாரமாகும்.

இதில் தற்போது நாட்டை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் அடங்கும்.

ராமர் பிறந்த இடமாக நம்பப்படும் அயோத்தியில், ராமர் கோயில் கட்ட அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.



 மசூதியை தொடமாட்டோம் என்று அவர்கள் வாக்களித்திருந்தனர். 

ஆனால், டிசம்பர் 5 ஆம் தேதி காலை பாபர் மசூதியை இடிப்பதற்கு, ஒத்திகை நடக்கப்போவதாக எனக்கு தெரிந்த பா.ஜ.க எம்.பி ஒருவர் கூறினார்.

"எந்த ஊடகங்களுக்கும் இந்தத் தகவல் கசிந்துவிடக் கூடாது என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளது.



ஆனால் நீ என் நண்பன் என்பதால் நான் உன்னிடம் சொல்கிறேன்" என்று அந்த எம்.பி தெரிவித்தார்.

காவித் துண்டு, தலைப்பாகை மற்றும் சிறப்பு நுழைவு பேட்ஜ் அணிந்து ஒரு தொண்டர் போல மாறுவேடமிட்டு, மசூதிக்கு அருகில் இருந்த மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

காவித்துண்டு மற்றும் தலைப்பா அணிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர்.

"ஒத்திகையை புகைப்படம் எடுக்க இதுதான் ஒரே வழி.

என்னுடனே இருந்து தொண்டர்கள் போல கோஷங்களை எழுப்பு.

இப்படி செய்தால் நீ பாதுகாப்பாக இருப்பாய்" என்று ஒரு செயலர் என்னிடம் கூறினார்.

என்னருகே வந்த நபர் ஒருவர், என் முன் நின்று என் கேமராவை கீழே போட சொல்லி சைகை காண்பித்தார்.

அவரிடம் நான் என் பேட்ஜை காண்பித்து அங்குள்ளவர்களைப் போல கத்தி கோஷமிட்டேன்.

பின்பு தூரத்திலிருந்த பெரிய கூட்டத்தை நோக்கி என்னை அவர் போகச் சொன்னார்.



என் கேமராவை எடுத்து என் கண்முன் நடந்த நம்பமுடியாத காட்சிகளை புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன்.

இரும்புக்கம்பிகள், கோடாரிகள், மண்வாரிகள் போன்றவற்றை வைத்திருந்த ஆண்களை பார்க்கும் போது அவர்கள் தொண்டர்கள் போல அல்ல, கட்டடத்தை தரைமட்டமாக்குவதையே தொழிலாக வைத்திருப்பவர்கள் போல இருந்தனர்.

பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 2009 ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில்:

"பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பு ஒரு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையத்திற்கு முன் கூறப்பட்டுள்ளது.

இதற்கான புகைப்படங்களும் ஆணையப் பதிவுகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக சிலருக்கு பயிற்சியளிக்கப்பட்டது குறித்த உறுதியான சான்று இல்லையென்றாலும், சில சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன.

மேலும், பாபர் மசூதியை இடிக்க கர சேவகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என சில வாக்குமூலங்கள் சுட்டிக்காட்டுகின்றன." என்று கூறுகிறது.

தொண்டர்கள் கூட்டத்தில், முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டிருந்த ஒருவரை நான் படம் பிடித்தேன்.

கயிறுகளாலும் இரும்பு சரடுகளாலும் இடிப்பு ஒத்திகை மேற்கொண்டிருந்தவர்களுக்கு அவர் கட்டளையிட்டு கொண்டிருந்தார்.

 அவர் பார்ப்பதற்கு வலதுசாரி கட்சித் தலைவர்களில் ஒருவர் போல் இருந்தார்.

அதனால் முகத்தை காண்பிக்க அவர் விரும்பவில்லை.

இடிப்பு ஒத்திகையை வெற்றிகரமாக முடித்த தொண்டர்கள், உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பினர்.

உடனே, நான் என் கேமராவை மறைத்துக் கொண்டேன்.

 கூட்டத்தோடு கோஷம் எழுப்பிக்கொண்டு, இந்த ஒத்திகையை பார்த்து புகைப்படம் எடுத்த ஒரே பத்திரிக்கையாளர் நான் தான் என்ற சிலிர்ப்பில் வெளியே வந்தடைந்தேன்.

அடுத்த நாள், நான் உள்ளிட்ட மற்ற பத்திரிக்கையாளர்களும் மசூதியை பார்க்க ஏதுவாக ஒரு கட்டடத்தின் நான்காவது மாடியில் ஏறி நின்று கொண்டோம்.

1.5 லட்சம் தொண்டர்கள் ஊர்வலமாக வருவதை விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பகுதியில் காவலுக்கு நின்ற போலீசாரும் கோஷங்களை எழுப்பினர்.

நண்பகல் சுமார் 12.15 மணிக்கு வன்முறையில் ஈடுபட தொடங்கிய அவர்கள், போலீசாரையும், மசூதியை பாதுகாத்திருந்த காவலர்களையும் தாக்கத் தொடங்கினர்.

இச்சம்பவம் குறித்த புகைப்பட ஆதாரங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காக, நான்காவது மாடிக்கு ஏறி அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களையும் புகைப்படக்காரர்களின் கேமராக்களையும் தாக்கத் தொடங்கினர்.

இதெல்லாம் நடந்த சில மணி நேரங்களிலேயே மசூதி தரைமட்டமாக்கப்பட்டது.

என் கால்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஹோட்டலை நோக்கி ஓடினேன்.

கலவரம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

எனக்கு உதவ போலீசார் யாரேனும் உள்ளனரா என்று சுற்றும்முற்றும் பார்த்தேன்.

ஆனால் அனைவரும் கடைகள், வீட்டின் ஜன்னல் கதவுகளை எல்லாம் மூடிக் கொண்டிருந்தனர்.

மசூதியை அவர்கள் தரைமட்டமாக்கிய அன்று, ஒரு இந்துவாக பிறந்ததற்கு அவமானமாக உணர்ந்தேன்.

லிபரான் கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்தேன்.

சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று வரை சாட்சிக்காக அழைக்கப்படுகிறேன்.

25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால் இதற்கு காரணமான ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...