Skip to main content

அரசியல் கட்சிகளின் நன்கொடை விபரம் பற்றிய தகவல்

அரசியல் கட்சிகள், தகவல் சட்டத்தில் வருமா?     
              =========================================================



அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்புக்கு உள்பட்டவையே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை பிறப்பித்தது.

அரசியல் கட்சிகளின் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 6 தேசிய கட்சிகள் மத்திய அரசின் நிதியுதவியை மறைமுகமாகப் பெற்று வருவதாகவும், ஆர்டிஐ சட்டத்துக்கு உள்பட்டு செயல்படும் அரசு அமைப்புகளுக்கு உள்ள சிறப்பம்சங்கள் அரசியல் கட்சிகளுக்கு உள்ளதாகவும் சிஐசி கூறியுள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான சுபாஷ் அகர்வால் மற்றும் அனில் பெய்ர்வால் ஆகியோர், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய 6 அரசியல் கட்சிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் எழுதி இருந்தனர்.

நன்கொடையாக பெற்ற தொகை, நன்கொடை வழங்கியவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு அந்தக் கடிதத்தில் கேட்டிருந்தனர். ஆனால், அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் வராது எனக் கூறி, 6 கட்சிகளும் தகவல் தர மறுத்தன.

சுபாஷ் அகர்வால் மற்றும் அனில் பெய்ர்வால் ஆகியோர் இதுகுறித்து மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தனர். இந்த மனுவை தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த் மிஸ்ரா, தகவல் ஆணையர் எம்.எல். சர்மா மற்றும் அன்னபூர்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, தங்களது மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில் 3 முக்கிய வாதங்களை பெய்ர்வால் முன் வைத்தார்.

குறிப்பாக, மத்திய அரசிடம் மறைமுகமாக நிதியுதவி பெறுவதால் அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்ட வரம்புக்கு உள்பட்டவையே என கூறினார்.

இதனை ஏற்றுக் கொண்ட அமர்வு, தகவல் உரிமை சட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கட்டுப்பட்டவையே என உத்தரவிட்டுள்ளது.

மேலும், தங்களது தலைமை அலுவலகங்களில் மத்திய பொதுத் தகவல் அதிகாரியையும் (சிபிஐஓ), மேல் முறையீட்டு அதிகாரிகளையும் 6 வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என்றும், ஆர்டிஐ சட்டத்தின் நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட உள்ள சிபிஐஓ-க்களுக்கு சிஐசி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஆர்டிஐ சட்டத்தின்படி, மனுதாரர்கள் கேட்டுள்ள விவரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிடுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது அரசியல் கட்சிகளின் பணியாக உள்ளதால், ஆர்டிஐ சட்டத்தின் 2(ஹெச்)ஆவது பிரிவின் கீழ் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பு எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் வருவதால் அரசியல் கட்சிகளின் வெளிப்படையான செயல்பாடு உறுதி செய்யப்படுவது மட்டுமல்லாமல், ஜனநாயகமும், ஜனநாயக அமைப்புகளும் வலுவடையும் என ஆணையம் கூறியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பதையும், தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்வதற்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதையும் இந்த அமர்வு சுட்டிக் காட்டியுள்ளது.

இவ்வாறு மறைமுகமாக அரசின் நிதியுதவியைப் பெறும் அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்டத்துக்கு உள்பட்டு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளன என்று சிஐசி அமர்வு கூறியுள்ளது.

சிஐசி பிறப்பித்துள்ள இந்த உத்தரவின் மூலம், நன்கொடை அளித்தவர்கள் விவரம், நிதி எவ்வாறு செலவழிக்கப்பட்டது, வேட்பாளர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகி உள்ளது.

Comments

  1. Borgata Hotel Casino & Spa in Atlantic City, NJ - MapYRO
    Get directions, reviews and information for 시흥 출장마사지 Borgata Hotel Casino & 의정부 출장안마 Spa 하남 출장마사지 in Atlantic City, NJ. Borgata Hotel Casino & 전주 출장안마 Spa and Borgata 의왕 출장마사지 Hotel Casino & Spa

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...