Skip to main content

எதற்கு கொடுக்க வேண்டும் லஞ்சம்???

லஞ்சம் தவிர! நெஞ்சம் நிமிர்! 

அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், எங்கு புகார் அளிக்க வேண்டும்...!



படித்து பயன் அடையுங்கள்!  பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்! 

அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை பெருகிவிட்டது.

நேர்மையாக பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. லஞ்சம் வாங்குவோரை பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலையும் வந்துவிட்டது. இதற்குகாரணம், லஞ்சம் வாங்குவோரே, 'மெஜாரிட்டி'யாக உள்ளனர். 'லஞ்சம் வாங்குவது ஒன்றும் தப்பில்லை; அரசாங்க வேலை பெறவும், விரும்பிய இடத்துக்கு, 'டிரான்ஸ்பர்' பெறவும் பல லட்சங்களை செலவழிக்கிறோம். முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற வேண்டாமா' என, லஞ்சம் வாங்குவதை, நியாயப்படுத்தவும் துணிந்துவிட்டனர்

முன்பெல்லாம், சட்டத்தை மீறி காரியங்களை செய்ய மட்டுமே, அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள். இப்போது, சட்டப்படியான ஒரு காரியத்தை செய்யக்கூட லஞ்சம் கேட்கிறார்கள்; அதுவும் மிரட்டிக் கேட்கிறார்கள்.

நம் நாட்டில் லஞ்சமும்- ஊழலும் கக்கூஸ் முதல் சட்டமியற்றும் பார்லிமென்ட் வரை நாறடித்துக்கொண்டிருக்கிறது. எல்லா துறைகளிலும், கல்லாப்பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. லஞ்சம் கொடுப்போர் இருக்கும்வரை, வாங்குவோரும் இருக்கத்தான் செய்வர்.

வாங்குவது குற்றமெனில்; கொடுப்பதும் குற்றமே. அந்த குற்றத்தை இனி, செய்ய வேண்டாம். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், சட்டப்படியாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது எப்படி......?

அரசின் நலத்திட்ட உதவி பெற, உங்களுக்கு வருமானச் சான்று தேவைப்படுகிறது என, வைத்துக்கொள்வோம். வருவாய்த்துறை அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பம் அளிக்கிறீர்கள். அங்குள்ள அதிகாரியோ, '3000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் சான்று வழங்குவேன்' என்கிறார். அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். 'பணத்துடன் வருகிறேன்' என, பவ்யமாக கூறிவிட்டு வெளியேறிவிடுங்கள். லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் எழுத்து பூர்வமான புகார் அளியுங்கள். புகாரை பெற்றதும், லஞ்ச ஒழிப்புத்துறையின், ஆரம்பகட்ட விசாரணை இரு விதமாக நடக்கும்.

எதிரிகள் பொய் புகார் அளித்து பழிவாங்கவும்கூடும். எனவே, ரகசிய விசாரணை நடத்தி, புகார் உண்மை என்பதை உறுதி செய்த பிறகே, அடுத்தகட்ட கைது நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும்.

லஞ்சம் கேட்ட அதிகாரியை, 'பொறி' வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மனுதாரரின் மன உறுதி மிக முக்கியமானது.

புகார்தாரர் மனஉறுதியுடன் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைக்க ஆலோசனைகள் வழங்கப்படும். அதன்பிறகே, லஞ்ச பேர்வழியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கும்.

லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில்
நேரம் குறிக்கப்படும்: புகார்தாரர், தன்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு, 'நான் உங்களை சந்திக்க எப்போது வரலாம்' என, கேட்டு, நேரம் குறிப்பார். லஞ்ச பணத்தை வாங்கி பையில் போடும் ஆவலில், அந்த அதிகாரியும் ஓர் நேரத்தை சொல்வார்.

இதற்காகத்தானே இத்தனை நாட்களாய் காத்திருந்தோம்' என்பதைப் போன்று, அவர்கள் அதிரடியாக உள்ளே புகுந்து லஞ்ச அதிகாரியை கைது செய்வர்.

சில நேரங்களில், அதிகாரிகள் நேரடியாக லஞ்சம் வாங்காமல் ஏஜென்ட்கள் மூலமாகவும், தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மூலமாகவும் பெறக்கூடும். அவ்வாறு பெற்றாலும், ஏஜென்ட் அல்லது ஊழியர் அளிக்கும் வாக்குமூலத்தை கொண்டு, அந்த அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் இடமுண்டு.

புகார்தாரர் கவலைப்படத் தேவையில்லை. லஞ்ச அதிகாரி கைது நடவடிக்கையின்போது, அவருக்கு வழங்கப்பட்ட லஞ்ச பணம் கட்டாயம் புகார்தாரருக்கு திரும்பக் கிடைத்துவிடும்.

அரசு இயந்திரத்தை கண்காணித்து நிர்வகித்து வரும் அலுவலர்கள், லஞ்சமற்ற நிர்வாகத்தை வழங்குவேன் என, மன உறுதியுடன் செயலாற்ற வேண்டும். லஞ்சம் வாங்குவதைப் போல், லஞ்சம் கொடுப்பதும் மாபாதகச் செயல் என்பதை உணர வேண்டும். இவ்வாறான உணர்வை கொண்ட நல்ல உள்ளங்கள் ஒன்றுபட்டால், 'லஞ்சமற்ற பாரதம்' என்பது வெறும் கனவல்ல; நாளைய நிஜம்.

--- வழக்கறிஞர் பாண்டியன்
தமிழக அறப்போர் இயக்கம்

யாரிடம் எப்படி தொடர்பு கொள்வது
_______________________________________

மாநில ஊழல் தடுப்பு பிரிவு....!

கண்காணிப்பு பிரிவு....!

அலுவலகத்தின்
முகவரி, தொலைபேசி எண்கள்:

இயக்குனர், மாநில ஊழல் தhozchn@cbi.gov.in
்காணிப்பு பிரிவு, என்.சி.பி.,௨௧-௨௮, பி.எஸ்., குமாரசாமி ராஜா சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை - 600 028

அலுவலகம்: 044- - 2461 2561 பேக்ஸ்: 044 - 2461 6070

கட்டுப்பாட்டு அறை: 044 - 24615929 / 24615949

**************************************
கோவை: காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, எண். 4 ராமசாமி நகர் முதல் தெரு, கவுண்டம்பாளையம், கோவை - 641 030. தொலைபேசி: 0422 - 244 9550; துணைக் கண்காணிப்பாளர் மொபைல்: 94450 48882

***********************************
திருப்பூர்: காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, எண்: 40, இரண்டாவது வீதி, 40 அடி ரோடு, ஆஷர் நகர், (எஸ்.ஏ.பி., தியேட்டர் பின்புறம்) அவிநாசி ரோடு, திருப்பூர் - 641 603. தொலைபேசி எண் : 0421 -- 2482 816; துணைக் கண்காணிப்பாளர் மொபைல்: 94450 48880

**********************************
நீலகிரி: காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, மதுவானா சந்திப்பு, கோத்தகிரி ரோடு, ஊட்டி, நீலகிரி - 643 001. தொலைபேசி: 0423- - 244 3962

********************************
தமிழகம், புதுச்சேரிக்கான சி.பி.ஐ.

அலுவலக முகவரி: இணை இயக்குனர், மத்திய புலனாய்வுத் துறை (CBI), 3வது தளம், ஈ.வி.கே., சம்பத் பில்டிங், கல்லுாரி சாலை, சென்னை - 600 006. போன்: 044- - 28232756, 28272358; மொபைல் போன்: 09444 446240; இ-மெயில் முகவரி: hozchn@cbi.gov.in

**********************************
ஊழல் தடுப்பு பிரிவு...!

மத்திய புலனாய்வுத் துறை (CBI), 3-ம் தளம், சாஸ்திரி பவன், நெ.,26 ஹாடோவ்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 6. போன்: 044- - 28273186; 28270992; hobacchn@cbi.gov.in; 09445674567

Comments

Popular posts from this blog

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.

வாய்தா என்றால் என்ன ?? ( சட்டம் அறிந்துகொள்வோம் )

வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன? வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன?  ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும் வாய்தா வழங்கும் மு றை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது. பிரிவு 309 – Power to postpone or adjourn Proceedings – 1. நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் வரம்புரையாக – இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, 376(அ), 376(ஆ), 376(இ), 376(ஈ)- ன் கீழான குற்றம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது, முடிந்த மட்டும் அந்த வழக்கு விசாரணையை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் 2 மாதத்துக்குள் முடிக்க வேண்