Skip to main content

உண்ண உணவு இல்லாத நாட்டில் எதற்கும் பயன்படாத சிலை எதற்கு??

அயோத்தியில் 151 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட ராமர் சிலை: படேலை தொடர்ந்து பாஜக நாட்டை வல்லரசாக்கும் அடுத்த முயற்சி?



https://tamil.thehindu.com/india/article25410486.ece

சிலைகள் வைத்தால் நாடு வல்லரசு ஆகுமா.?

மத வெறியர்களின் கையில் நாடு

நாடு முன்னேற வழில்லை,எதற்கு ஆட்சியில் அமர்ந்தோம் என்பதை மறந்து பழத்தோட்டதில் புகுந்த மந்திகள் கூட்டம் என்ன செய்யுமோ அதுதான் நடக்கிறது.

மக்களின் வளர்ச்சி கல்வி,மருத்துவம்,போக்குவரத்து,தொழில்,விவசாயம் இதை பற்றி கொஞ்சமும் கவலைப்பட வில்லை மோடி அரசு...

மக்களை மாக்களிலும் கேவலமாய் நினைப்பதால்தான் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை செய்து தருவதை விடுத்து முட்டாள்தனமாக சிலைவைக்கவும் அந்த சிலையைச் செய்ய பக்கத்து நாட்டுக்காரனிடம் செல்லவும் முடிகிறது.

இனியும் மக்கள் இதை கண்டும் காணாததுபோல் இருந்தால் மடமையே இந்த கொடுமையை எதிர்த்து நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையனை எதிர்த்து நேதாஜி போராடியது போல் நாம் நம்மை முட்டாளாக்கத்துடிக்கும் பாசிசத்தை எதிர்த்து போராட வேண்டிய நிலை

மீண்டும் ஒரு சுதந்திரப்போர் ...

இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு கேவலமான ஆட்சியாளர்கள் ஆண்டது இல்லை என்பதே வரலாறு..

பட்டேலுக்கு வைத்த 3000 கோடி சிலைக்கு பதிலாக  இந்தியாவில் உள்ள அனைத்து அரசாங்க பள்ளிகளையும் தனியார் பள்ளிகளைவிட  நவீனமாக ஆக்கலாம் என்ற பேச்சு அடங்கும் முன் மறு சர்ச்சை!

நாடெல்லாம் சிலை அமைத்து உழைப்பவனின் வயிற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு
பசியிலூம் பட்டனியிலும் செத்து போகும் மக்களை பற்றி கொஞ்சமும் கூட கவலையில்லை மோடி அரசுக்கு..

மக்களே இன்னும் நன்றாக உழையுங்கள் அப்ப தான் நாட்டிற்கு வரி வருவாய் உயரும் மோடி அரசு போட்டி போட்டுக்கொண்டு சிலைகளை திறக்க முடியும்.

குறிப்பு :- இதே உத்திர பிரதேசத்தில் தான் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் பிராணவாயு இன்றி மடிந்தார்கள்... இறந்த உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் இருசக்கர வாகனத்திலும் தோளிலும் சுமந்து சென்ற அளங்கோல காட்சிகளை மறக்குமுன்... மக்களை வாட்டி வதைத்து பிடுங்கிய வரியில் மற்றுமொரு வானுயர சிலை....

Comments