Skip to main content

ராஜலட்சுமியை தொடர்ந்து இப்போது சொளமியா

தருமபுரி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்

https://tamil.thehindu.com/tamilnadu/article25463412.ece



இனி எத்தனை காலம் தான் இந்த அவலம் தொடரும்???

 நீதிமன்றங்கள் தண்டனையை கடுமை ஆக்கினால் மட்டுமே இந்த கேடுகெட்ட குற்றங்கள் குறையும்..

சவுமியா உயிர் பறித்தது
கயவர்களா?

உயிரற்ற அரசு எந்திரமா?

தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி, பழங்குடி சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை. மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

கடந்த 6ம் தேதி, அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்,சதீஷ்  என்ற இரண்டு அயோக்கியர்கள் சவுமியாவை பாலியல் கொடுமை செய்துள்ளனர்.

தன்னைக் காத்துக் கொள்ள சவுமியா நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த அயோக்கியர்கள் சவுமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

மாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர்.

காவலர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து,மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால் புகாரை பெற மறுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் கவணத்திற்கு எடுத்து சென்ற பிறகே இரவு 12 மணிக்கு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போதும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் இரண்டு தினங்கள் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர்.

இரண்டு தினங்கள் கழித்து மிகக் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சவுமியாவை தரும்புரி மருத்துவமனைக்கு காவலர்கள் துணையின்றி அனுப்பியுள்ளனர்.

சாதாரண பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் சவுமியா உயிரிழந்தார்.

உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு சவுமியாவை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யும் வரை சடலத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போராடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...