Skip to main content

குண்டர் சட்டத்தை பற்றிய விவரங்களை..

குண்டர் தடைச் சட்டம் என்பது என்ன? 



இந்தச் சட்டத்தின் முழுப்பெயர் சற்றே நீளமானது. The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug offenders, Goondas, Immoral Traffic Offenders, Forest Offenders, Sand Offenders, Slum Grabbers and Video Pirates Act, 1982. இதைத்தான் சுருக்கமாக குண்டர் தடைச் சட்டம் அல்லது குண்டர் சட்டம் என்கிறார்கள்.

யாரெல்லாம் இதன் கீழ் கைதுசெய்யப்பட வாய்ப்புகள் உள்ளன?
இந்தச் சட்டத்தின்படி கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள்; விற்பவர்கள், போதைப்பொருள் விற்பவர்கள், சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குண்டர்கள், பாலியல் தொழில்; ஆள் கடத்தல்; பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், வனங்களுக்கு ஊறுவிளைவிப்பவர்கள், மணல் கொள்ளையர்கள், நில ஆக்ரமிப்பாளர்கள், திருட்டு டி.வி.டி தயாரிப்பவர்கள், விற்பவர்கள் ஆகியோரை இந்த சட்டத்தின்படி கைதுசெய்ய முடியும்.

சட்ட நடைமுறைகள் என்ன?
மேற்கண்ட குற்றங்களில் ஒருவர் தொடர்ச்சியாக ஈடுபடும்போது அவர் மேல் உள்ள வழக்குகளின் அடிப்படையில் கூடுதலாக அரசு அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும். பொதுவாக, ஒருவர் கைது செய்யப்பட்டல் 20 முதல் 90 நாட்கள் வரை குற்றத்தின் தன்மையப் பொருத்து சார்ஜ் சீட் பதியப்பட வேண்டும். ஆனால், குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டால் ஒரு வருடத்துக்கு அவர் மேல் சார்ஜ் சீட் பதிய வேண்டியது இல்லை. 

மேலும், இந்தக் காலத்தில் அவர்களுக்கு வெளியே வருவதற்கான பிணையும் வழங்கப்பட மாட்டாது. குண்டர் சட்டத்தில் ஒருவர் கைதான குறிப்பிட்ட நாட்களுக்குள் அவரை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்பதற்கான காரணம் கேட்டு நோட்டிஸ் வழங்கப்படும். அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். பிறகு, அவர் மீது விசாரணை நடத்தித் தீர்ப்புச் சொல்லப்படும். 

தீர்ப்பில் தண்டனை உறுதியானால் ஒரு வருடத்துக்குப் பிணையற்ற சிறைவாசம் உறுதிசெய்யப்படும். தண்டனை காலம் முடிந்ததும், குற்றவாளியின் மேல் உள்ள இதர வழக்குகள் தொடர்ந்து நடைபெறும். இந்த குண்டர் சட்டம் குறித்து ‘மிளிர்கல்’, ‘முகிலினி’ ஆகிய நாவல்களை எழுதியவரும்; தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து டேனியலால் எழுதப்பட்ட ‘Red Tea’ நூலை ‘எரியும் பனிக்காடு’ என தமிழில் மொழிபெயர்த்தவரும்; மனித உரிமை ஆர்வலரும்; வழக்குரைஞருமான இரா.முருகவேளிடம் பேசினோம்.

‘‘இந்தச் சட்டம் தமிழகத்தில் 1982 முதல் நடைமுறையில் இருந்துவருகிறது. மேலோட்டமான பார்வைக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பானது போல தோன்றினாலும் உண்மையில் இந்தச் சட்டத்தை முறை தவறிப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, தனக்கு எதிரானவர்கள் என்று கருதக் கூடியவர்களைப் பழி வாங்குவதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் ஆட்சியாளர்கள் இந்தச் சட்டத்தை ஆரம்பம் முதலே பயன்படுத்தி வருகிறார்கள். பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்று ஒரு ஷரத்து உள்ளது. 

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் என்றால் என்ன என்பதற்கான வரையறைகள் என்ன? இது சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடு என்கிறோம். சட்டப்படி இங்கு உள்ள அனைவருக்குமே தனது கருத்தைப் பேசவோ, வெளியிடவோ முழு உரிமை உண்டு. ஆனால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது என்ற பெயரில் அப்படிக் கருத்துச் சொல்பவர்களையும் அமைதியான, ஜனநாயக வழியில் போராடுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தால் ஒருவரின் அடிப்படை உரிமையையே பறிப்பதாக ஆகிறது. 

நில ஆக்ரமிப்பாளர்கள், அபகரிப்பாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்கிறோம் என்ற பெயரில் அரசால் கைவிடப்பட்ட புறம்போக்கு நிலங்கள், ஆக்ரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கும், உரியவர்களுக்கும் ஒதுக்கித் தரப் போராடும் யூனியன்கள், களப் போராளிகள் ஆகியோரை ஒடுக்குவதற்காகவும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள் ஆட்சியாளர்கள். உண்மையான நில அபகரிப்பாளர்கள், ஆக்ரமிப்பாளர்கள் வெளியே சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அவலம்.

தடா, பொடா போன்ற தடைச்சட்டங்களை நீக்கச் சொல்லிப் போராடிய அளவுக்கு சிவில் சமூகம் இந்த குண்டர் சட்டத்துக்கு எதிராகப் போராடியது இல்லை. ஆட்கடத்தல் முதல் ரவுடியிசம் வரை பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு எதிராகவும் இந்தச் சட்டம் செயல்படுவதால் இந்த சட்டத்துக்கு எதிரான குரல்கள் வலுவாக எடுபடாமல் போகின்றன. 

ஆனால், குண்டர் சட்டத்தை அரசு தன் நலன்களுக்காக முறைதவறிப் பயன்படுத்துவது என்பது கண்டித்தக்கது. 2004ம் ஆண்டில் திருட்டு விசிடி வழக்கில் சிக்குபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. 2011ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் ஒரே ஒரு குற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால்கூட அவர்களையும் குண்டர் சட்டத்தில் இணைக்க முடியும் என்ற ஆணையைப் பிறப்பித்தது. 

வெறும் 30 ரூபாய் சிடி ஒன்றைக் கொண்டு ஒருவரை கேள்விகளின்றி கைது செய்ய முடியும் என்ற இந்த சூழல் ஆபத்தானது. திருட்டு விசிடியை ஒழிக்கக் கொண்டு வந்த சட்டத்தைக் கொண்டு அரசு தனக்கு வேண்டாதவர்களை ஒழித்துக்கட்ட முடியும் என்பதுதான் பிரச்னையே.
தமிழகத்தைப் பொருத்தவரை வருடத்துக்கு சராசரியாக 3,000 நபர்கள் வரை இந்தச் சட்டத்தால் கைது செய்யப்படுகிறார்கள். அதாவது, தினசரி சுமார் ஏழு அல்லது எட்டு நபர்கள். இந்தியாவிலேயே குண்டர் சட்டத்தால் அதிகமானவர்கள் கைது செய்யப்படும் மாநிலங்களில் முதன்மையானதாக தமிழகமும் இருக்கிறது...’’ என்கிறார் இரா.முருகவேள்   

குண்டர் சட்டத்தின் வரலாறு

ஆங்கிலேய அரசு காலத்தில் 1923ல் கல்கத்தாவில்தான் (இன்று கொல்கத்தா) இந்தச் சட்டம் முதன் முதலாக அமலாக்கப்பட்டது. பின்னர் அதை அந்த மாகாணம் முழுமைக்குமான சட்டமாக மாற்றினார்கள். Habitual offenders எனப்படும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த வழக்குத் தொடரப்பட்டது. 

தொடர்ந்து சுதந்திரத்துக்கு பிறகு ஒவ்வொரு மாநிலங்களாக இந்தச் சட்டம் அமலாக்கப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை 1982 முதல் இந்தச் சட்டம் வழக்கத்தில் உள்ளது. கள்ள சாராய வணிகமும், நில ஆக்ரமிப்புகளும் அதிகரித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தச் சட்டம் தமிழகத்தில் அமலானது. ஆனால், அப்போது முதலே இந்தச் சட்டத்தின்படி அரசுக்கு வேண்டப்படாதவர்கள், ஆளுங்கட்சிக்கு எதிரானவர்கள், எதிர் கட்சிகள் போன்றோர் மீது வழக்குத் தொடுப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில் குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்

வருடம் நபர்கள்

2013      3125

2014      3423

2015      2885

2016      2701

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...