Skip to main content

UAPA என்னும் உபா சட்டத்தை பற்றிய தகவல்

UAPA சட்டம் என்றால் என்ன? 

தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும்.

UAPA (Unlawful Activities Prevention Act



இதன் சட்ட விதிகள்:

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டமானது, பயங்கரவாத ""பொடா'' சட்டத்தின் மறு அவதாரமாக புதிய கொடிய விதிகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

"பொடா'' சட்டத்தைப் போலவே, இச்சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் கொட்டடியில் அடைத்து வதைக்க முடியும்.

 பயங்கரவாத குற்றம் நடந்த இடத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகையோ, அல்லது வேறு ஏதாவது தடயமோ இருந்தால் நீதிமன்றம் அவரைக் குற்றவாளிதான் என்று கருதி இச்சட்டப்படி கைது செய்ய முடியும்.

 தான் நிரபராதி என்பதைக் குற்றம்சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும்.

நாட்டின் ஐக்கியம் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலோ,அல்லது அச்சுறுத்துவது போல "பாசாங்கு'' செய்தாலோ கூட இச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய முடியும்.

ஒரு புலனாய்வுக்குத்தொடர்புடையது என்று கருதி போலீசு விவரம் கேட்டால் எவரும் முழுமையான தகவல்தரவேண்டும்.

இல்லையேல் இச்சட்டப்படி கைது செய்ய முடியும்.

 பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவோ,மறைமுகமாகவோ ஆதரவு தருபவர்களுக்குக் கடும் தண்டனை, தகவல் தொடர்பை இடைமறித்துக் கேட்டு அதை ஆதாரமாகக் காட்டி ஒருவரைக் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணைவழங்க கடும் விதிமுறைகள் என போலீசு, நீதித்துறைக்கு எல்லையற்ற அதிகாரமளிக்கும்வகையில் இப்புதிய "பொடா'' சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வரையறை இச்சட்டத்தில் தெளிவாக இல்லாததால், இவர் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்று குற்றம் சாட்டி, போலீசார் யாரையும் கைது செய்ய முடியும்.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...