Skip to main content

எங்கள் வீட்டு பிள்ளை ராஜலட்சுமிக்கு ஊடகம் குரல் கொடுக்க மறுப்பது ஏன்?

மீ டூ வுக்காக ஏதோ நாட்டையே உலுக்கிய சம்பவம் போல பத்திரிக்கையாளர்களையும் செய்தியாளர்களையும் நாள் தோறும் சந்தித்து பொங்கிய பெண்ணியக்கவாதிகளும் ஊடகங்களும் இப்போது எங்கே போய் முக்காடு போட்டுக்கொண்டனர்! 



சமூகத்தில் வசதி படைத்தவர்கள் புகார் அளித்தால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் செய்தியை பொறுக்கும் ஊடகங்கள் இப்போது எங்கே?!

நடிகைகளும் பிண்ணனிப்பாடகிகளும் ஏதோ தங்கள் கற்பை சூறையாடி விட்டதாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் நீலிக்கண்ணீர் வடித்தபோது அச்சச்சோ என ஆண்களை திட்டித்தீர்த்த நபர்கள் இப்போது ஏன் வாய் திறக்கவில்லை?

பாதிக்கப்பட்ட பெண் ஏழை என்பதலா அல்லது அவர்கள் இனமல்ல என்பதாலா?

இதே போல வடமாநிலங்களில் சம்பவம் நடந்தால் பரபரப்பாக செய்தி வெளியிடும் தேசிய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளவில்லையே என்ன காரணம்?!

ஒரு நடிகைக்காக ஒப்பாரி வைத்த நடிகைகள் இந்த பெண்ணின் தாயை சந்தித்து அனுதாபம் கூறாதது ஏன்? அது அவர் அறியப்படாதவர் என்பதாலா?!

நான் யார்????

இங்கே என் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலையுண்டு கிடந்தேன்..

இப்பவும் அதுபற்றி பேசாமலும் ..

எனக்கான நீதி கிடைக்காமலும் இருக்கிறதே..

அப்படியெனில் நான் யார்???

சாகப்பிறந்தவளா... ??

நான் என்னை சாதிக்கப்பிறந்தவள் என்றே நினைத்திறுந்தேன் சாதி எனும் சாக்கடையில் இருப்பதை மறந்து...

உங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையெனில் கொன்றுவிடுவீர்கள் அப்படிதானே???

என் கழுத்து அறுக்கபடும் என்று நான் பிறந்த போது என் பெற்றோரோ அல்லது நானோ நினைத்திருக்க வில்லை..

அவன் குடும்பம் மட்டுமா அவனை காக்க நினைக்கிறது ... சாதிய கட்டமைப்பும் தான்..

ஆனால் எனக்கு யார் இருக்கா .. நான் தான் ராஜலட்சுமி யா போய்டேனே..

நான் யார் கேள்விக்கு விடை தெரியாமலும் இன்னும் என்னை போன்றோரின் எத்தனை தலைகள் அறுக்கப்படும் என்ற பயத்தோடும் போகிறேன்.. 

Comments

  1. இன்னும்இதுபோன்ற இராஜ லட்சுமிகள் எத்தனை எத்தனை, செத்தும் சாகாமலும் துடிதுடித்துகொண்டு வாழ்கிறார்கள் இல்லைசெத்து செத்து வீழ்கிறார்கள்.

    ReplyDelete
  2. இன்னும்இதுபோன்ற இராஜ லட்சுமிகள் எத்தனை எத்தனை, செத்தும் சாகாமலும் துடிதுடித்துகொண்டு வாழ்கிறார்கள் இல்லைசெத்து செத்து வீழ்கிறார்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...